அடுத்து ஆக்‌ஷன் படம் தான் போல.. ஜிம்மே கதியென கிடக்கும் த்ரிஷா.. துருவ நட்சத்திரம் சாங் தான் மஜா!

சென்னை: 96 படத்துக்குப் பிறகு நடிகை த்ரிஷாவுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் குவிந்தன. பேட்ட, பொன்னியின் செல்வன், லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அதிரடி காட்டினார். மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த ஐடென்டிட்டி படத்திலும் இவருக்கு செம சூப்பரான கதாபாத்திரம் அமைந்தது.

சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்து முடித்து அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நடிகை த்ரிஷா அடுத்ததாக பெரிதாக எந்த படத்தையும் கமிட் செய்யவில்லையே என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Trisha reveals she once thought walking was enough but now she believe on heavy workout

சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சில நாட்கள் துபாயில் வசித்து வந்த புகைப்படங்களும் வெளியாகின. நடிகை நயன்தாராவும் பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவை சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்தார்.

நடந்தா மட்டும் போதும்னு நினைச்சேன்: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெறித்தனமாக எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக, ஆரம்பத்தில் வெறுமனே நடைபயிற்சி மட்டும் செய்தால் போதும் என நினைத்தேன். ஆனால், தற்போது உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமானால் ஹெவி ஒர்க்கவுட் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செய்கிறேன் என தனது ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

துருவ நட்சத்திரம் சாங்: கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், அந்த படத்திற்காக பால் டப்பா பாடிய பாடல் ஏகப்பட்ட ஜிம்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது ஜிம் வீடியோவுக்கும் த்ரிஷா அந்த பாடலையே கோர்த்து வெளியிட்டு ரசிகர்களையும் ஒர்க்கவுட் செய்ய வெறியேற்றி வருகிறார்.

அடுத்து ஆக்‌ஷன் படமா?: நடிகை த்ரிஷா நடிப்புக்கு சின்னதாக ஒரு பிரேக் விட்டுள்ளார் என்றே தெரிகிறது. தனது உடலை ஃபிட்டாக மாற்றி வருகிறார் என்பதை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பாக அடுத்து ஒரு ஆக்‌ஷன் படத்துக்குத்தான் தலைவி தாறுமாறாக ரெடியாகி வருகிறார் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X