மோகினியில் பேயாட்டம்... த்ரிஷாவை 'ஹீரோ'வாக்கிய மாதேஷ்! #Mohini #Trishtrashers

By Shankar

Recommended Video

ஹாரர் - த்ரில்லர் - ஆக்ஷன் என மூன்று ஜானர்களில் த்ரிஷாவின் மோகினி... வீடியோ

மோகினி... தமிழ் சினிமாவில் ஹாரர் - த்ரில்லர் - ஆக்ஷன் என மூன்று ஜானர்களை கலந்து கட்டி உருவாகியிருக்கும் புதிய திரைப்படம்.

ஜென்டில்மேன், காதலன், முதல்வன் நாட்களில் ஷங்கரின் இன்னொரு மூளையாகச் செயல்பட்டவர் மாதேஷ். தனித்து படம் பண்ண ஆரம்பித்த பிறகு சாக்லேட், மதுர, அரசாங்கம், கோச்சடையான் (இயக்குநர் சௌந்தர்யா என்றாலும், மாதேஷ் பங்களிப்பு பெரிது), மிரட்டல் போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களைத் தொடர்ந்து இயக்குநராக மாதேஷின் அடுத்த படைப்பு இந்த மோகினி.

ஆர் மாதேஷ்

ஆர் மாதேஷ்

இந்தப் படத்தில் த்ரிஷாதான் ஹீரோ - கம் - ஹீரோயின். அது எப்படி? மாதேஷிடமே கேட்போம்:

"என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். இது ஒரு மாஸ் படம் என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு பெரிய ஹீரோ செய்ய வேண்டிய வேலைகளை த்ரிஷா செய்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

ஆக்ஷன் - காமெடி

ஆக்ஷன் - காமெடி

இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. Horror பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மிரட்டல்

மிரட்டல்

'காதலன்' படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபுதேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது.

செம ட்ரைலர்

செம ட்ரைலர்

இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தைப் பார்க்கும் அனைவரும் படத்தோடு தங்களை எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கனேஷ் மற்றும் "பண்ணீர் பூஷ்பம்" சுரஷே் போன்ற அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X