'லெஜன்ட்' பாலகிருஷ்ணாவுடன் டூயட் பாடப்போகும் த்ரிஷா
சென்னை: த்ரிஷா தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.
த்ரிஷா கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தவர். அவர் தெலுங்கு திரை உலகில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பவன் கல்யாண், பிரபாஸ், வெங்கடேஷ், நாகர்ஜுனா என்று பெத்த பெத்த நடிகர்களுடன் நடித்தார். ஆனால் அவரால் பாலகிருஷ்ணாவுடன் மட்டும் நடிக்க முடியாமல் இருந்தது.

பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட மாட்டோமா என்று நினைத்து காத்திருந்தார் த்ரிஷா. அவரது ஆசை நிறைவேறிவிட்டது. ஆம் லெஜன்ட் படத்தை அடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் த்ரிஷா தான் நாயகி. சொல்லவா வேண்டும் த்ரிஷா தற்போது குஷியாக உள்ளார்.
புதுமுகம் சத்யதேவ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்குகிறது. படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
பெத்த ஹீரோ, பெரிய தொகை, பெத்த படம் த்ரிஷா மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











