Trisha : நாளை த்ரிஷா பிறந்த நாள்.. மூக்கு தொட்டு விளையாடீட்டு இருக்காங்களே.. நிஜத்துலயும் தனலட்சுமி தானா?

சென்னை: தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, மே 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், த்ரிஷாவின் லேட்டஸ்ட் வீடியோக்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றன.

த்ரிஷாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் 'கருப்பு'. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பரபரப்பான தேர்தல் சூழலில் த்ரிஷாவின் பிறந்தநாள், அதாவது நாளை (மே 4) த்ரிஷாவின் பிறந்தநாள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளதால், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த பரபரப்பில் இருக்கப் போகிறது. இத்தகைய சூழலிலும் த்ரிஷாவின் ரசிகர்கள் கடந்த சில வாரங்களாகவே அவரது பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Trisha s Birthday Buzz Goes Viral Fans Say She s Real-Life Dhanalakshmi

நிஜத்திலும் தனலட்சுமி தான்: த்ரிஷாவின் தோழியும் நடிகையுமான நிகிஷா பட்டேல், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வாழ்த்து வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் த்ரிஷா ஹோட்டல்களுக்கு செல்வது, உற்சாகமாக அரட்டை அடிப்பது மற்றும் ஜாலியாக விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள், "த்ரிஷா நிஜ வாழ்க்கையிலும் 'கில்லி' படத்தில் வரும் தனலட்சுமி போல செம ஜாலியான டைப் தான்" என்று கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.

துணை: த்ரிஷா குறித்து நிகிஷா பதிவிட்டுள்ளதாவது "கடந்த 20 வருடங்களாக எனக்கு உற்ற தோழியாக, சகோதரியாக, வாழ்நாள் துணையாக இருக்கும் த்ரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். த்ரிஷா மற்றும் சார்மி கவுருடன் நான் செலவிடும் நேரங்கள் விலை மதிப்பற்றவை. எனக்கு எப்போதெல்லாம் பலமும் பாதுகாப்பும் தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் எனக்கு ஒரு புகலிடமாக இருந்து துணையாக நின்ற த்ரிஷாவிற்கு மிகப்பெரிய நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் த்ரிஷா செம ஜாலியாக ஆட்டம் ஆடிக்கொண்டும், உணவு சாப்பிட்டுக்கொண்டும் செய்யும் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Trisha s Birthday Buzz Goes Viral Fans Say She s Real-Life Dhanalakshmi

சுட்டித்தனம்: நடிகை த்ரிஷா, நிகிஷா பட்டேல் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து தனது நேரத்தை எவ்வளவு ஜாலியாக கழிக்கிறார் என்பதை அந்த வீடியோக்கள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. வீடியோவின் ஒரு பகுதியில், த்ரிஷா எவ்வித ஒளிவுமறைவுமின்றி மிகவும் இயல்பாக, துள்ளலாக ஆட்டம் போடுகிறார். விதவிதமான உணவுகளை ரசித்துச் சாப்பிடும் த்ரிஷாவின் 'ஃபுடி' (Foodie) அவதாரமும் இதில் தெரிகிறது. கேமரா முன்னால் விசித்திரமான முகபாவனைகளைச் செய்துகொண்டும், தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டும் அவர் செய்யும் சுட்டித்தனங்கள், "த்ரிஷாவிற்கு வயதே ஆகாதா?" என ரசிகர்களைக் கேட்கத் தூண்டியுள்ளது.

வாழ்த்து மழை: நிகிஷா பட்டேல் த்ரிஷாவையும் டேக் செய்து இந்த நெகிழ்ச்சியான பதிவை இட்டுள்ளதால், தற்போது இது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. நாளை தேர்தல் முடிவுகள் ஒரு பக்கம் பரபரப்பைக் கிளப்பினாலும், இணையதளங்கள் த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களால் களைகட்டப் போவது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X