twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷாவின் திடீர் கழுதைப் பாசம்!!

    By Shankar
    |

    நாய்கள், பூனைகள் என கைவிடப்பட்ட வீட்டு விலங்குகளைத் தேடிப் பிடித்து கரிசனமும் இரக்கமும் காட்டி வந்த நடிகை த்ரிஷா, இப்போது கழுதைகளைத் தேடிப் போய் அன்பு காட்டுகிறாராம்!

    நடிகர் நாகர்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலாவின் விலங்குகள் நலம் காக்கும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு தெரு நாய்களைக் காக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் த்ரிஷா.

    இதனால் கேட்பாரற்று தெருக்களிலும் சாலைகளிலும் திரியும் பல தெருநாய்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பூனைகளையும் ஆபத்திலிருந்து காக்க வலியுறுத்தி வருகிறார்.

    நாய், பூனை மீது பாசம் காட்டிய திரிஷா தற்போது கழுதைகள் மீது பாசம் காட்ட தொடங்கியிருக்கிறார்.

    நாய்களுக்கென்று நாய்கள் தினம் கொண்டாடும் திரிஷா, கழுதைகள் தினம் என்ற தலைப்பில் கழுதைகளுக்கு ரொட்டித் துண்டு போன்ற உணவுகளைத் தருவதுபோன்ற படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடன் வேறு சி்ல நடிகைகளும் கைகோர்த்துள்ளனர்.

    விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீடாவின் விளம்பரத் தூதராக இருந்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கையில் போதிய படங்கள் இல்லாத நிலையில், கிடைக்கிற பொழுதை இப்படி விலங்குகள் நலம் பேணுவதில் கழிக்க ஆரம்பித்துள்ளாராம் த்ரிஷா.

    English summary
    On more than one occasion Trisha has proven to be an ardent animal lover. Dressed in casuals, the tollywood beauty feeds bread to some stray donkeys along with her friends.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X