வானத்தில் மிதக்கும் த்ரிஷா: காரணம் ரஜினி
Recommended Video

பேட்ட படத்தில் த்ரிஷா கேரக்டர்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு- வீடியோ
சென்னை: தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ளார் த்ரிஷா.
நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தலைவர் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் த்ரிஷாவுக்கு இருந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை பல முறை பேட்டிகளின்போது தெரிவித்தார் அவர்.

அதன் பலனாக கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்கியுள்ள பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் அவரின் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது.
இந்நிலையில் த்ரிஷா தான் ரஜினியுடன் இருக்கும் பேட்ட பட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற என் கனவு நிறைவேறிவிட்டது. பெருமை மற்றும் மகிழ்ச்சியுடன் சரோவை அறிமுகம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications