திரிஷா இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தீங்களா?.. நாய் குட்டியில் குறியீடு வெச்சுருக்காரோ.. கேஷுவலா இருக்காங்க
சென்னை: விஜய்யுடன் திரிஷா ஒன்றாக திருமணத்துக்கு சென்றதுதான் கடந்த சில நாட்களாக பரபரப்பு செய்தியாக மாறியிருக்கிறது. அதுவும் ஒரே நிறத்திலான உடையை அணிந்தபடி அவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக சென்றது விஜய் ரசிகர்களிடமே பெரிய அதிருப்தியை சந்தித்திருக்கிறது. திரைத்துறையிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. அதற்கு திரிஷாவும் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்ட கையோடு; திரிஷாவும், விஜய்யும் ஒன்றாக வந்தார்கள். ஒரே நிறத்திலான ஆடையை அணிந்தபடி வந்தது மேற்கொண்டு அவ்விஷயத்துக்கு கவனத்தை கொண்டு வந்தது. இரண்டு பேரும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருந்தாலும் இத்தனை வருடங்களில் சேர்ந்து வருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென அவர்கள் வந்ததற்கும், சங்கீதாவின் விவாகரத்து மனுவுக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும்; அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகையே திரிஷாதான் என ஓபனாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

வலுக்கும் கண்டனங்கள்: அரசியலில் நல்லபடியாக வந்துகொண்டிருக்கும் விஜய்க்கு ஆப்பு வைக்கவே திரிஷா இப்போது மீண்டும் வந்திருக்கிறார். மனைவி விவாகரத்து கேட்டு நிற்கும்போது இப்படி ஒரு செயலில் ஈடுபடலாமா என விஜய்யின் ஆதரவாளர்களே கடுப்பாகிவிட்டார்கள். வீட்டில் இருக்கும் பெண்ணையே ஒழுங்காக பார்த்துக்கொள்ள முடியவில்லை; நீங்கள் எப்படி நாட்டை பாதுகாப்பீர்கள் என கேள்வி எழுப்புகிறார்கள். அதுமட்டுமின்றி நேற்றுகூட ரஞ்சனா நாச்சியார் என்ற தவெக நிர்வாகி விஜய்யை சரமாரியாக விளாசியிருந்தார்.
திரைத்துறையில் குரல்கள்: தவெகவினர், பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் இதற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். முதலில் சக இயக்குநர் பாலா, ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் சமுத்திரகனி இதுகுறித்து ஆதங்கத்தோடு பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், 'குந்தவையை வீட்டில் குந்த வையுங்கள்' என சொன்னதும்; அதற்கு திரிஷா கட்டமாக பதிலடி கொடுத்ததும்; இந்தப் பிரச்னையிலிருந்து திரிஷா - பார்த்திபன் என புது பிரச்னை முளைத்துவிட்டது.
பார்த்திபனின் வீடியோ: திரிஷாவின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு வீடியோக்களை ஷேர் செய்திருக்கிறார் பார்த்திபன். இரண்டாவது வீடியோவில் தனது மனதில் இருக்கும் அனைத்தையும் போட்டு உடைத்துவிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு வீடியோ வருமோ என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. இப்படி விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம் நாளொன்றுக்கு புது புது திசையில் பயணிக்கிறது. இதை பற்றியெல்லாம் திரிஷா கண்டுகொள்வதாக இல்லை.
திரிஷாவின் இன்ஸ்டா பதிவு: அவர் ரொம்பவே கேஷுவலாக இன்ஸ்டாவில் ஜாலியாக போஸ்ட்டுகளை போட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது அவர் தனது நாய் குட்டியை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அதோடு, 'கனவுலகில் பூனைகளை விரட்டிக்கொண்டிருக்கிறது' என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, நாயின் கனவுக்கெல்லாம் கவனம் கொடுக்கிறார்; இவரது செயலால் எங்கள் அண்ணாவின் முதலமைச்சர் கனவே சிதையும் நிலைக்கு சென்றுவிட்டதே என்று விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















