யாருமே அதை பார்க்கவில்லை.. நான் அப்படி செய்வேனா?.. திரிஷா கொடுத்த சூப்பர் விளக்கம்
சென்னை: நடிகை திரிஷா தனது 42 வயதிலும் கோலிவுட்டில் டாப் 5 இடத்துக்குள் இருக்கிறார். இளம் ஹீரோயின்களே அவருடன் போட்டி போட முடியாமல் திணறிவருகின்றன. ஃபுல் ஃபார்மில் திரிஷாவின் கரியர் போய்க்கொண்டிருக்கையில்; சமீபமாக விஜய் விவகாரத்தில் அவரது பெயர் டோட்டலாகவே டேமேஜ் ஆகிவிட்டது. பிரபுதேவா விஷயத்தில் எப்படி நயனை தரக்குறைவாக பேசினார்களோ அதேபோல் இதில் திரிஷாவை பேசுகிறார்கள். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
திரிஷாதான் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தலைப்பு செய்தியாக இருக்கிறார். விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட சூழலில்; விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அதுவும் மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள். அப்போதிருந்து இரண்டு பேருக்குள்ளும் ஏதோ கனெக்ஷன் இருக்கிறது. சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாதான் என்பதை அவர்களது வருகை உறுதி செய்துவிட்டதாக ஓபனாகவே பேச தொடங்கினார்கள்.

தவெகவினர் கோரிக்கை: விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் முதலில் அந்த ஜோடியான வருகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர்களே தங்களது தளபதியை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தார்கள். அவரை நினைத்து நொந்துகொண்டார்கள். அதேபோல் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளில் எல்லாம் சென்று, 'ப்ளீஸ் விஜய்யை விட்டு விலகிவிடுங்கள்'என்றும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் திரிஷாவோ எதற்கும் வாயே திறக்கவில்லை.
காதல் பற்றி பதிவு: விமான நிலையத்தில்கூட அவரை சூழ்ந்துகொண்டு விஜய்யுடனான வருகை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவரோ நேர் தண்டவாளத்தில் செல்லும் ரயில் போல கூலாக பதிலே சொல்லாமல் கடந்து சென்றார். இது ஒருபக்கம் இருக்க அவர் எப்போதுதான் திருமணம் செய்துகொள்வார் என்றும் மீண்டும் பேச தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். அவரோ சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "காதல் மட்டுமே எல்லாமும் இல்லை. ஆனால் காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது" என குறிப்பிட்டிருந்தார்.
திருமண ஆசை வந்துவிட்டதோ?: அவரது இந்தப் பதிவை பார்த்த பலரும், திரிஷாவுக்கு திருமண ஆசை வந்துவிட்டது. விரைவில் சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தன. இதுகுறித்து நேற்று தனது ஸ்டோரியில் திரிஷா, "நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேனாம். நேற்றிலிருந்து இரண்டு குழந்தைகளையும் நான் வளர்த்துக்கொண்டு இருக்கிறேனாம். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா இல்லை இன்றைக்கான கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
திரிஷாவின் போஸ்ட்: அவரது அந்தப் பதிவின் மூலம் திரிஷாவின் திருமணம் பற்றி வந்த தகவல் எல்லாம் வதந்தி என்பத் உறுதியானது. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ஸ்டோரி வைத்திருக்கிறார். அதில் அவர், "காலை நான்கு மணிக்கு எனது ஒர்க் அவுட்டை யாரும் பார்த்ததில்லை. வாரந்தோறும் நான் பல மணி நேரங்கள் செலவழித்து சாப்பாடு செய்வதை யாரும் பார்த்ததில்லை. இதையெல்லாம் யாருமே பார்த்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் நான் மேலே இந்த விஷயங்களில் எதையும் செய்ததே இல்லை" என்று ஜாலியாக குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, திரிஷா எப்போதுமே ஜாலியான நபர்தான். அவரை யாரும் ஒரு கட்டுக்குள் வைக்க முடியாது என நெருங்கி பழகியவர்கள் சொல்வார்கள். அந்த மனநிலைமைதான் விஜய் விஷயத்தை ரொம்பவே கூலாக அவரை ஹேண்டில் செய்ய வைக்கிறது என்றும் அவர்கள் சொல்வதுண்டு.


Click it and Unblock the Notifications















