Trisha: உறுதுணையாக இருப்பதற்கு நன்றி.. த்ரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
சென்னை: மார்ச் மாதம் 5ஆம் தேதி மாலையில் இருந்து இணையத்தில் தீயாக பேசப்பட்டு வரும் பொருள் என்றால் அது விஜய் உடன் நடிகை த்ரிஷா திருமணத்திற்குச் சென்றது தான். தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் திருமணத்திற்குச் சென்ற இவர்கள், ஒரே காரில், ஒன்றாக சென்று திரும்பினர். இது மட்டும் இல்லாமல் இருவரும் மேட்ச்சிங்காக பட்டாடை அணிந்து கொண்டு திருமணத்திற்குச் சென்றிருந்தனர். இது தொடர்பாக விஜய் ரசிகர்கள், விமர்சகர்கள், அவரது ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். இந்த பேச்சு இன்னும் ஓய்ந்ததாக இல்லை.

இப்படி இருக்கையில், விஜய் உடன் திருமணத்திற்குச் சென்றது தொடர்பாக நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி” என்று கேப்ஷனிட்டு தான் மட்டும் இருக்கும் புகைப்படங்கள் இரண்டைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள். மேலும் பலர் கமெண்ட் செக்ஷனில் நீங்க அழகா இருக்கீங்க குந்தவை என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
விஜய் எப்போதும் ஸ்பெஷல்: த்ரிஷாவுக்கு விஜய் என்றாலே எப்போதும் ஸ்பெஷல் தான். விஜய் பிறந்த நாளுக்கு தவறாமல் மிகவும் ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லி தனது அன்பை வெளிப்படுத்துவார். குறிப்பாக இருவரும் இருக்கும் எக்ஸ்குளுசிவான புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து கூறுவார். நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மோசமாக விமர்சிக்கும்போது கூட, நடிகர் விஜய் பெயரைக் குறிப்பிடாமல், எனது சொந்த விஷயங்களை அரசியலாக்க வேண்டாம் என்று கண்டித்தார். அதேபோல் அந்த கணடன அறிக்கையில் நயினார் நாகேந்திரன் பெயரும் இல்லை.
கீர்த்தி சுரேஷ்: இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷாவும் விஜய்யும் ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டனர். இதற்காக இருவரும் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அப்போதும் பேசு பொருளாக மாறியது. இப்படி இருக்கையில் த்ரிஷாவும் விஜய்யும் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமணத்தில் ஒன்றாக கலந்து கொண்டது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அது குறித்து எல்லாம் கவலைப் படாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான இரண்டு புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











