இறுதியாக ஒரே ஊரில் நாங்கள்.. அதற்கு நன்றி.. திரிஷா இப்படி உருகிருக்காங்களே.. மேடம் செம கூல்

சென்னை: விஜய்யுடன் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்துகொண்டார் திரிஷா. விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டதோடு மட்டுமின்றி தனது கணவருக்கும், ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அனைவருமே அந்த நடிகை திரிஷாதான் என்று ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த சூழலில்; அவர்கள் இரண்டு பேரும் அப்படி வந்ததை யாருமே விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷா கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஜொலித்துவருகிறார். இடையே சின்ன சறுக்கலை சந்தித்தாலும்; சுதாரித்துக்கொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்தார். கடந்த வருடத்தில் மட்டும் அவர் நடித்து தமிழில் மொத்தம் மூன்று படங்கள் வந்தன. அவற்றில் குட் பேட் அக்லி மட்டும்தான் ஓரளவுக்கு ரசிகர்களிடமே ஓகே ரகமாக இருந்தது. மற்ற இரண்டு படங்களான தக் லைஃப், விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன.

Trisha s Instagram Post Goes Viral Amid Vijay Link Rumours After Wedding Appearance
Photo Credit:

விஜய் பிரச்னையில் திரிஷா: அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் வருகின்றன. இப்படி தனது கரியரில் பீக்கில் இருக்கும் சூழலில் விஜய்யின் பிரச்னையில் திரிஷாவின் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது. சங்கீதா தனது விவாகரத்து மனுவில் நடிகை பற்றி குறிப்பிட்டிருந்தார். கண்டிப்பாக அந்த நடிகை திரிஷாவாகத்தான் இருக்கும். அவர்தான் அடிக்கடி விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் போட்டிருந்தார் என்றெல்லாம் கணிப்புகளை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்கள்.

ஜோடியாக வந்த விஜய், திரிஷா: அப்படிப்பட்ட நிலைமையிதான் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு விஜய்யும், திரிஷாவும் மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு ஒரே காரில் வந்து இறங்கி மணமக்களை வாழ்த்திவிட்டு; ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றார்கள். அப்போதிருந்து அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே உறவு இருப்பதாக அனைவருமே உறுதியோடு சொல்ல தொடங்கிவிட்டார்கள். சங்கீதா பிரச்னையில் திரிஷாவுடன் விஜய் கனெக்ட் ஆவார் என்று தவெகவினரே எதிர்பார்க்கவில்லைதான்.

Also Read
அஜித்தான் முன்னுதாரணம்.. இரண்டு கட்சிகளுமே குறி வைக்கின்றன.. ப்ளூ சட்டை மாறன் ஓபன்
அஜித்தான் முன்னுதாரணம்.. இரண்டு கட்சிகளுமே குறி வைக்கின்றன.. ப்ளூ சட்டை மாறன் ஓபன்

எல்லாத்துக்கும் மௌனம்தான்: அவர்கள் அப்படி வந்ததிலிருந்து இரண்டு பேருக்கும் தேர்தல் முடிந்த பிறகு திருமணம் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. அப்படி உருவாக்கப்பட்ட ரீல்ஸ்களுக்கு திரிஷாவின் தாய் உமாவும் லைக்குகளை போட்டார். அது மேற்கொண்டு விவாதமானது. யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அத்தனை சோஷியல் மீடியாக்களிலும் திரிஷாவின் செயல்பாடுகள்தான் கவனத்தை ஈர்த்துவருகின்றன. அவரோ எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துகொண்டு போஸ்ட்டுகள் மேல் போஸ்ட்டுகளாக போட்டு தள்ளுகிறார்.

திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இந்நிலையில் திரிஷா புதிதாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருக்கிறார். அதில், தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'இறுதியாக ஒரே ஊரில் நாங்கள் இருக்கிறோம். அற்புதமான உணவை கொடுத்ததற்கு மேகா கெம்மிற்கும், அம்மாவுக்கும் நன்றி' என தெரிவித்திருக்கிறார். அதேபோல் இன்னும் சில ஸ்டோரிகளிலும் நாய்க்குட்டியின் வீடியோவையும் வைத்திருக்கிறார். அவை அனைத்தும் இப்போது ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X