எல்லாம் அவன் செயல்.. செம ஜாலி மூடில் திரிஷா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: திரிஷா நடிப்பில் கடந்த வருடம் முன்று பெரிய படங்கள் வந்தன. ஆனால் அம்மூன்று படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை. குட் பேட் அக்லியை தவிர்த்து தக் லைஃப், விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே மோசமான தோல்வியைத்தான் சந்தித்தன. இந்த வருடம் அப்படியில்லை. அவருக்கு வெற்றியோடு பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. அவர் ஹீரோயினாக நடித்த கருப்பு திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
நடிகை திரிஷாவுக்கு 96 முன்னதாக பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. 96தான் அவருக்கு கம்பேக் கொடுத்தது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய படங்களில் நடித்தார்.குந்தவை கேரக்டரை அசால்ட்டாக செய்திருந்தார். அவரது மார்க்கெட் பழையபடி வேகம் எடுக்க டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அந்தவகையில் அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். அவற்றில் குட் பேட் அக்லி மட்டும்தான் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. கமலுடன் நடித்த தக் லைஃப் படமும் தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தன.

இந்த வருடம் சூப்பர்: கடந்த வருடத்தில் வந்த படங்கள் அனைத்துமே அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் இந்த வருடமோ அப்படியில்லை. அவரது நெருங்கிய நண்பர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கருப்பு திரைப்படமும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பி 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த படம் மெகா ஹிட்டாகியிருப்பதால் திரிஷா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அடுத்த படம்: திரிஷாவின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாக சிரஞ்சீவியுடன் நடித்திருக்கும் விஸ்வம்பரா திரைப்படம் வரவிருக்கிறது. அந்தப் படத்தை முடித்துவிட்டு சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்; இன்னும் சில படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நயனுக்கும் மார்க்கெட் டல்லடிக்க திரிஷாவின் காட்டில் இப்போது செம மழைதான் என்கிறார்கள் திரைத்துறையினர்.
திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கருப்பசாமி, தான் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் ஷேர் செய்து எல்லாம் கடவுளின் செயல் என போஸ்ட் போட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. இதை பார்த்த ரசிகர்களோ மேடம் செம டெடிகேட்டடாக ஸ்பாட்டில் வேலை செய்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
திரிஷாவின் சர்ச்சைகள்: முன்னதாக, திரிஷாவின் பெயர் கடந்த சில வருடங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தது. ஆனால் சமீபமாக அவரது பெயர் நடிகரும், முதலமைச்சருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையோடு கோர்க்கப்படுகிறது. தன்னை சுற்றி வரும் சர்ச்சைகள் அத்தனைக்கும் திரிஷா மௌனத்தால் பதிலடி கொடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
