கண்டதும் காதலில் விழுந்து இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த த்ரிஷா
சென்னை: த்ரிஷா கண்டதும் காதலில் விழுந்த போது எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
த்ரிஷாவை என்ன தான் பலரும் கிண்டல் செய்தாலும் இத்தனை ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். தற்போது நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து வருகிறார்.
கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் சுற்றுலா சென்றுவிடுகிறார்.
த்ரிஷா
த்ரிஷா தான் டால்பினை கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த டால்பினும் த்ரிஷாவுக்கு முத்தம் கொடுத்துள்ளது. கண்டதும் காதல் என்பதை நம்புமாறு கூறி அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
யோகி பாபு
த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த தளபதி ரசிகர் ஒருவர் கொரில்லா பட புகைப்படத்தை போட்டு கலாய்த்துள்ளார்.
கலாய்
த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்த பலர் க்யூட், அழகு என்று பாராட்டியுள்ளனர். சிலர் கலாய்த்தும் உள்ளனர்.
விஜய் சேதுபதி
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 96 படம் அடுத்த மாதம் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை த்ரிஷா பெரிதும் நம்பியுள்ளார். பாடல் வீடியோவில் அவருக்கும், விஜய் சேதுபதிக்குமான கெமிஸ்ட்ரி அருமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications