தேர்தல் முடிவுகள் சில நாட்களில்.. திரிஷா இன்ஸ்டா போஸ்ட்டை பாருங்க.. பூடகமாக சொல்றாங்களோ

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. அவரது நடிப்பில் அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இதற்கிடையே விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே விஜய்யுடன் திரிஷா ஜோடியாக வந்தது பரபரப்பை உண்டு செய்தது. மேலும் திரிஷா சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வரப்போகிறார்; விஜய்யின் கட்சியின் அவருக்கு போஸ்ட்டிங் எல்லாம் ரெடி என்ற கிசுகிசுக்களும் பரவின. இந்நிலையில் திரிஷா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

நடிகை திரிஷா நீண்ட காலமாக டாப் ஹீரோயினாக இருக்கிறார். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு புகழை சம்பாதித்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தவர். இருப்பினும் அவரது பெர்சனல் கேரக்டரை இதுவரை யாரும் பெரிதாக அட்டாக் செய்யாமல்தான் இருந்தார்கள். ஆனால் திரிஷாவின் சமீபத்திய செயல் ஒன்று அதற்கு வழி வகுத்துவிட்டது. விஜய் இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என சங்கீதா குற்றச்சாட்டு வைத்த சில நாட்களிலேயே மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு அவருடனேயே வந்தார் திரிஷா.

Trisha s May Season Instagram Post Sparks Buzz Amid Vijay Link and Political Rumors
Photo Credit:

பெரிய தவறா அது?: அவர்கள் அப்படி செய்தது பெரிய பேசுபொருளானது. சிலரோ விஜய்யும், திரிஷாவும் நெருங்கிய நண்பர்கள். அதன் காரணமாககூட இப்படி வந்திருக்கலாம்; அப்படியே அவர்களுக்குள் என்ன உறவு இருந்தால் உங்களுக்கு என்ன என்றும் இரண்டு பேருக்கும் பாதுகாப்பாக பேசுகிறார்கள். யார் எவ்வளவு பேசினாலும் இந்த விஷயத்தில் விஜய் மற்றும் திரிஷா ஆகிய இரண்டு பேரின் கேரக்டர்களும், இமேஜுகளும் உடைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் கள எதார்த்தம். இதுதொடர்பாக இரண்டு பேரும் சைலெண்ட்டாகத்தான் இருக்கிறார்கள்.

கவனிக்கப்படும் திரிஷா செயல்: அப்போதிருந்து திரிஷா என்ன செய்தாலும் அனைவரது கவனத்துக்கும் அது வந்துவிடுகிறது. அவரும் இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்ட்டுகள் எல்லாம் சுற்றி வளைத்து வேறு எதையோ சொல்ல வருவது மாதிரியும் தோன்றும். போதாக்குறைக்கு அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் என்று உருவாக்கப்பட்ட ரிலீஸ்களுக்கு எல்லாம் திரிஷாவின் அம்மா லைக்கை வேறு போட்டு; எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனையையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறார்கள்.

இளம் தலைவர் வாழ்க: இதற்கிடையே திரிஷா அரசியலுக்கு வரவிருக்கிறார் என்று வேறு பரப்பிவிட்டார்கள். சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்த அவர்; இதுகுறித்து வாயே திறப்பதில்லை. மேலும், கடந்த 23ஆம் தேதி நடந்த தேர்தல் வாக்குப்பதிவு செய்ய அவர் சென்றபோது, 'இளம் தலைவர் வாழ்கவே' என்று சிலர் கோஷம் போட்டார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அநேகமாக அவர் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

ட்ரெண்டாகும் போஸ்ட்: அவரும்கூட கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே தனக்கு சி.எம் அகும் ஆசை இருப்பதாக சீரியஸாகவே சொல்லியிருந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே நான்காம் தேதிக்கு திரிஷாவுக்கு பிறந்தநாளும்கூட. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் அவர், "மே (நான்) சீசன் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார். கோடை கால சீசனைத்தான் அவர் அப்படி சொல்கிறாரா அல்லது மே மாதம் தேர்தல் ரிசல்ட் வருகிறது. எனவே புதிய சீசன் தொடங்குகிறது என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறாரா என கேள்வி எழுப்பிவருகிறார்கள் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X