Trisha: அரசியலுக்கு ரெடியாகிட்டாங்களா த்ரிஷா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிறு மாலையா?
சென்னை: தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் முதல் இன்றைய ஜென் ஜி, ஆல்ஃபா கிட்ஸ் வரை 'எவர்கிரீன் க்ரஷ்' ஆக வலம் வரும் த்ரிஷா, திடீரென தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும், நெட்டிசன்களையும் ஓவர் திங்கிங் செய்ய வைத்துள்ளார்.
"Chennai, someone special has something to tell you tomorrow at 7 PM! Stay tuned, something exciting is coming!"
என்று த்ரிஷா போட்ட இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த 90ஸ் கிட்ஸ், "தலைவி ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க.. நாளைக்கு ஆஹா.. ஓஹோ-ன்னு ஒரு சம்பவம் இருக்கு" என எக்சைட் ஆகிப் பேச, வழக்கம் போல நம் வீட்டு ஆல்ஃபா கிட்ஸ் மற்றும் நெட்டிசன்கள் தங்களது பாணியில் இந்த போஸ்ட்டை 'ரோஸ்ட்' செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ட்ரெண்டிங்கில் வரலட்சுமி.. நெட்டிசன்களின் ஃபன் ரியாக்ஷன்: த்ரிஷா போஸ்ட் போட்ட சில நிமிடங்களிலேயே, நடிகை வரலட்சுமி சரத்குமார் அதை ஷேர் செய்து, "Super exciting about this!" என்று த்ரிஷாவை டேக் செய்ய.. நெட்டிசன்களோ, "என்னப்பா.. நீங்களே போஸ்ட் போட்டு, நீங்களே கமெண்ட் பண்ணி ஹைப் ஏத்துறீங்களா? இதெல்லாம் அந்த காலத்து மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி பாஸ்" என கமெண்ட் செக்ஷனில் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
இதைப்பார்த்த இன்றைய இளசுகள், இந்த அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் 'உண்மை' என்னவாக இருக்கும் என இரண்டு விதமான தியரிகளை குக் செய்ய ஆரம்பித்துள்ளனர்:
அரசியல் எண்ட்ரியா?: "சினிமால இருக்குற எல்லாரும் இப்ப பார்ட்-டைம் பொலிட்டிஷியன் ஆகிட்டு இருக்காங்க. த்ரிஷாவும் நாளைக்கு அரசியலில் குதிக்கப்போறாங்களா? லோக்கல் பாலிடிக்ஸ்ல 'மங்காத்தா' ஆடப்போறாங்களா?" என்று ஒரு குரூப் தீவிரமாக விவாதித்து வருகிறது.

பிசினஸ் லான்ச்சா?: "போலீஸ் வேலையை விட்டுட்டு த்ரிஷாவை சைட் அடிச்ச சத்யதேவ் (என்னை அறிந்தால் அஜித்) கதையா.. இதெல்லாம் படத்தோட பிரமோஷனோ அல்லது புதுசா ஏதோ துணிக்கடை, பியூட்டி புராடக்ட் லான்ச் பண்றதுக்கான பில்டப்-பா தான் இருக்கும். 'சம்படி ஸ்பெஷல்'னு சொல்லி கடைசியில பிராண்ட் அம்பாசிடரா யாரையாவது கூட்டிட்டு வந்து நிக்க வைப்பாங்க!" என கூலாக சொல்கிறார்கள் ஆல்ஃபா கிட்ஸ்.
கனெக்ட் ஆகுமா.. இல்ல கிரிஞ்ச் ஆகுமா?: "உங்களுக்கு வேணா இது சர்ப்ரைஸா இருக்கலாம்.. எங்களுக்கு இதெல்லாம் ஜஸ்ட் இன்னொரு விளம்பர உத்தி தான்" என்று இன்றைய ஜெனரேஷன் நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்தாலும், நாளை மாலை 7 மணிக்கு த்ரிஷா உடைக்கப் போகும் அந்த 'சர்ப்ரைஸ் முட்டை' என்ன என்பது பலரது தூக்கத்தை கெடுத்துள்ளது உண்மைதான்.
த்ரிஷாவின் இந்த சர்ப்ரைஸ், நாளை நெட்டிசன்களின் 'ஹார்ட்டை வின்' செய்யப் போகிறதா அல்லது ஆல்ஃபா கிட்ஸிடம் சிக்கி 'ரோஸ்ட்' ஆகப்போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பப்ளிக் வெயிட்டிங்!


Click it and Unblock the Notifications