தெலுங்கு வெப் தொடருக்கு தாவிய த்ரிஷா... பூஜையுடன் துவக்கம்!

ஐதராபாத் : நடிகை த்ரிஷா தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதையடுத்து வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் உருவாகவுள்ள புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளார் த்ரிஷா.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அரண்மனை 2 படத்தில் பேயாக இவர் நடித்திருந்த நிலையில் அந்தப் படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது.

பிருந்தா வெப் தொடர்

பிருந்தா வெப் தொடர்

ஆயினும் இவரது நடிப்பில் படங்கள் குறைந்துள்ளன. இந்நிலையில் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டவர்கள் வரிசையில் இவரும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தெலுங்கில் பிருந்தா என்ற வெப் தொடர் உருவாக உள்ளது.

புதுமுக இயக்குநர்

புதுமுக இயக்குநர்

ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த தொடரை சோனி லைவ் முதல்முறையாக தெலுங்கில் தயாரிக்க உள்ளது. ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த சீரிஸ் த்ரிஷாவிற்கு முதல் அனுபவம். இந்த தொடரை எழுதி இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சூர்யா வாங்காலா.

8 எபிசோட்கள்

8 எபிசோட்கள்

8 எபிசோட்களாக இந்த தொடர் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் தொடராக உருவாகவுள்ள இந்த சீரிசில் சாய் குமார், அமானி உள்ளிட்டவர்களும் நடிக்கவுள்ளனர். அவினாஷ் கொல்லா என்பவர் இந்த தொடரின்மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார்.

பூஜையுடன் துவக்கம்

பூஜையுடன் துவக்கம்

சக்தி காந்த் கார்த்திக் என்பவர் தொடருக்கு இசையமைக்கவுள்ள நிலையில் தற்போது இந்த தொடர் பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜையின் புகைப்படங்களையும் படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தொடரில் த்ரிஷாவின் லுக்கும் இந்த பகிர்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டத்தில் த்ரிஷா

அடுத்தகட்டத்தில் த்ரிஷா

படங்களில் ஹீரோயினாகவும், தனிப்பட்ட கேரக்டர்களிலும் நடித்துள்ள த்ரிஷா தனது அடுத்தக்கட்டத்தை வெப் தொடரின்மூலம் மேற்கொண்டுள்ளார். வெப் தொடர்களில் தணிக்கை பிரச்சினை இல்லாத நிலையில் இதில் நடிப்பதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் த்ரிஷாவின் இந்த தொடர் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X