»   »  "டெரர்"... இது எந்த நடிகையோட செல்லப்பேரு தெரியுமா?

"டெரர்"... இது எந்த நடிகையோட செல்லப்பேரு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லூரிகாலத்தில் திரிஷாவை அவரது நண்பர்கள் டெரர் என்றே அழைப்பார்களாம்.

தமிழில் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. அதனைத் தொடர்ந்து நாயகியான திரிஷா, சாமி, லேசா லேசா, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

நாளை மறுதினம் திரிஷா நடித்த அரண்மனை 2 படம் ரிலீசாக உள்ளது.

குடியரசு தின ஸ்பெஷல்...

குடியரசு தின ஸ்பெஷல்...

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார் திரிஷா.

டெரர்...

டெரர்...

அதில் ஒருவர், கல்லூரி காலத்தில் உங்களின் செல்லப் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, ‘திரிஷா தி டெரர்' என திரிஷா பதிலளித்துள்ளார்.

ரஜினி...

ரஜினி...

இதேபோல், யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு, ‘ரஜினியுடன்' என திரிஷா தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திக்கேயன்...

சிவகார்த்திக்கேயன்...

சிவகார்த்திக்கேயனுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறி விட்டீர்களாமே என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை, அவருடன் நடிக்க எனக்கும் விருப்பம் தான் என திரிஷா பதிலளித்துள்ளார்.

நன்றி...

நன்றி...

திரிஷாவின் இந்தப் பதிலைக் கேட்டு சிவகார்த்திக்கேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். கூடவே சோ கைண்ட் ஆப் யூ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

கொடி...

கொடி...

தனுஷுடன் திரிஷா நடித்து வரும் கொடி படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trisha had an interesting Twitter chat with her fans yesterday (26th January). The Aranmanai 2 actress was asked many questions. Trisha took time to answer some of the questions that were asked and here are some of her interesting replies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil