அரசியலுக்கு வருகிறாரா திரிஷா?.. தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதா உருவாகிறாரா?.. அவரே ஓபனா சொல்லிருக்காரே
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. மௌனம் பேசியதேதான் அவர் நடித்து வெளியான முதல் படமாகும். இடையே பல வெற்றிகளையும், சில தோல்விகளையும் பார்த்த அவர்; அறிமுகமாகி 20 வருடங்கள் கழித்தும் டயர் 1 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய்யுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்ததிலிருந்து; திரிஷா என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடுகிறது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
மாடலாக இருந்த திரிஷாவுக்கு லேசா லேசா படத்தின் மூலம் திரையுலக கதவுகள் திறந்தன. ஆனால் அந்தப் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட; சூர்யாவை வைத்து அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் நடித்து அறிமுகமாகிவிட்டார் திரிஷா. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த சாமி, கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துவிட்டன. இதன் காரணமாக சரசரவென்று குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

இப்போதும் பிஸிதான்: தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதை 96 படத்தில் சரி செய்துவிட்டு பொன்னியின் செல்வன் 1, 2, விடாமுயற்சி, லியோ, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் அத்தனை படங்களுமே ஒன்று சுமார் வரவேற்பை பெற்றன அல்லது தோல்வியை சந்தித்தன. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்திலும் நடித்திருக்கிறார். இன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இப்படி அவர் கரியர் செம பிஸியாக இருக்கும் சூழலில் அவரது பெயர் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது.
என்ன பிரச்னை?: அதாவது விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்தார். மேலும் ஒரு நடிகையுடன் தனது கணவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் குண்டை தூக்கி போட்டார். அவர் அப்படி சொன்ன சில நாட்களிலேயே திரிஷாவும், விஜய்யும் ஒரே கலர் டோனில் ட்ரெஸ் அணிந்துகொண்டு திருமணத்துக்கு வந்தார்கள். அப்போதிருந்து இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. விஜய்யும், தமிழ்நாடு முதலமைச்சராகிவிட்டார்.
பதவியேற்பு விழாவில்: ரிசல்ட் வந்த அன்றே திரிஷா விஜய் வீட்டுக்கு முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கும் வந்திருந்தார். அவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விஜய் மேடையில் பேச பேச திரிஷா எமோஷனலாக கேட்டுக்கொண்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது ஒருபக்கம் இருக்க; திருச்சி கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக திரிஷாவை விஜய் களம் இறக்குவார் என்று பேச்சுக்கள் பறந்துகொண்டிருக்கின்றன. கண்டிப்பாக அவர் தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதாதான் என்றும் அடித்து சொல்ல தொடங்கிவிட்டார்கள்.
திரிஷா பேட்டி: அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் திரிஷாவின் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷன் சமயத்தில் அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால் அதில் நான் எதுவுமே செய்ய முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications
