த்ரிஷாவின் கருணை மனசு!
தனது ஒவ்வொரு பட ரிலீசின்போதும் ஆதரவற்றோருக்கு ஏதாவது உதவி செய்வது அவர் வழக்கம். இதற்காகவே அவரது ரசிகர் மன்றங்கள் செயல்படுகின்றன.
பிறந்த நாள் போன்ற விசேஷங்களின்போது பகல் முழுவதும் பல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்கள், மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவுவார் த்ரிஷா. மாலையில்தான் நண்பர்களுக்கே நேரம் ஒதுக்குவாராம்!
இப்போது சமரன் படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருக்கும் அவர், திடீரென ஒரு நாள் காஞ்சிபுரத்துக்கு கிளம்பிப் போயிருக்கிறார்.
அங்குள்ள மனநலம் பாதித்த குழந்தைகள் காப்பகத்துக்குப் போன த்ரிஷா, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தன் கையால் உணவு வழங்கி நீண்ட நேரம் அவர்களுடன் செலவிட்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற அனுபவங்கள்தான் எனக்கு மிகுந்த நிறைவைத் தருகின்றன. அன்றைக்கு காஞ்சிபுரத்தில் அந்தக் குழந்தைகளோடு இருந்தது மறக்க முடியாதது. ஒவ்வொருவரும், தங்களால் முடிந்த அளவு இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவுங்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications












