Trisha: விஜய்யை விட வைரலான த்ரிஷா.. அரசியலை விட ட்ரெண்டான புடவை..விலை என்ன?
சென்னை: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்பு விழா எவ்வளவு பிரம்மாண்டமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றதோ, அதே அளவுக்கு அந்த விழாவில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. திரிஷா எதற்காக இந்த விழாவில் கலந்து கொண்டார்? அவருக்கு அரசியலுடன் என்ன தொடர்பு? என்ற கேள்விகள் ஒரு பக்கம் பரவலாக பேசப்பட்டாலும், மறுபக்கம் அவர் அணிந்து வந்த ஊதா நிற பட்டு புடவை பெண்கள் மத்தியில் புதிய ட்ரெண்டாகி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவானது. இதையடுத்து மே 10ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

விஜய் பதவியேற்பு விழா: இந்த விழாவில் விஜய் கருப்பு நிற சூட் கோட் அணிந்து மிகவும் கம்பீரமாக வந்திருந்தார். அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விதமும், அதன்பின் அவர் மக்களிடம் பேசியதும் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது சாதாரண அரசியல் மாற்றம் இல்லை, புதிய தலைமுறையின் தொடக்கம் என அவரது ரசிகர்கள் இணையத்தில் பெருமையாக ஷேர் செய்து வருகின்றனர். விஜயின் பேச்சு ஒருபக்கம் வைரலாகிக்கொண்டு இருக்க, நடிகை த்ரிஷா இளம் ஊதா நிற பட்டு புடவையுடன், தலையில் மல்லிகைப்பூ வைத்து பாரம்பரியத்துடன் வந்து விழா முழுவதும் பலர் கவனித்ததோடு, இணையதளங்களிலும் அவரது புகைப்படங்கள் மின்னல் வேகத்தில் பரவின.
மனம் கவர்ந்த புடவை: திரிஷா அணிந்து வந்த அந்த புடவை தற்போது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ட்ரெண்டாக மாறியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் "திரிஷா பதவியேற்பு லுக்", "ஊதா பட்டு புடவை" போன்ற ஹாஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. பல பெண்கள் அதே மாதிரியான புடவையை வாங்குவதற்காக கடைகளிலும் ஆன்லைன் தளங்களிலும் தேடி வருகின்றனர். இது Pure Handloom Silk இதன்விலை 40 ஆயிரத்தில் இருந்து 1 லட்ச ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் த்ரிஷா 96 படத்தில் அணிந்து இருந்த சுடிதாரை பல பெண்கள் அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்ந்து இருந்தனர். அதேபோல், தற்போது விஜயின் பதவியேற்பு விழாவிற்கு திரிஷா அணிந்து வந்த இந்த ஊதா நிற பட்டு புடவை பெண்களின் புதிய ஃபேஷன் ட்ரெண்டாக மாறியுள்ளது


Click it and Unblock the Notifications