ஒன் அண்ட் ஒன்லி திரிஷா.. மேடத்தோட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தீங்களா?.. ஓபனா சொல்லிருக்காங்க
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இன்னமும் மின்னிவருகிறார் திரிஷா. இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். மொத்தம் அப்படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் அந்த சந்தோஷத்தோடு அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழிகளாக நடித்தவர்களில் ஒருவர் திரிஷா. அதனையடுத்து லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் ஹீரோயினாக அறிமுகமான அவர்; சில படங்களிலேயே தமிழின் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, ரவி மோகன், ஆர்யா என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் மேடத்துக்கு சரியான மார்க்கெட் இருந்தது.

கம்பேக் தந்த திரிஷா: தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவருக்கு இடையில் திடீரென தோல்விகளாக வந்தன. உடனே சுதாரித்த அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்தவகையில் அவர் நடித்த 96, பொன்னியின் செல்வன் படங்கள் எல்லாம் சூப்பரான ரெஸ்பான்ஸை கொடுக்க; அம்மணிக்கு அந்தப் படங்களே கம்பேக் படங்களாக அமைந்துவிட்டன. நயனுக்கும் திருமணத்துக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தது. அந்த கேப்பை சரியாக பயன்படுத்தினார் திரிஷா.
எல்லாம் பெரிய படங்கள்தான்: கடந்த வருடத்தில் மட்டும் அவர் மூன்று பெரிய படங்களில் நடித்தார். இந்த வருடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படத்தில் திரிஷா ப்ரீத்தி என்ற வக்கீல் கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. உலகளவில் இதுவரை மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலை அள்ளியிருப்பதாகவும் அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால் திரிஷா சூப்பர் ஹேப்பியாக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இந்நிலையில் திரிஷா வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அதாவது, 'விஜய்யின் படங்களில் அதிகம் வசூல் செய்த லியோ, அஜித்தின் படங்களில் அதிகம் வசூல் செய்த குட் பேட் அக்லி, சூர்யாவின் படங்களில் அதிகம் வசூல் செய்த கருப்பு ஆகிய மூன்று படங்களிலும் பொதுவான விஷயம் திரிஷா ஹீரோயின் என்பது. ஒன் அண்ட் ஒன்லி திரிஷா' என அந்த ஸ்டோரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த படங்கள்: மூன்று பெரிய ஹீரோக்களின் அதிக வசூல் செய்த படங்களில் திரிஷா ஹீரோயின் என்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக சிரஞ்சிவீயுடன் விஸ்வம்பரா படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மாதம் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வயதிலும் திரிஷாவின் கரியர் ஸ்டெடியாக போய்க்கொண்டிருப்பதை பார்த்து திரைத்துறையினர் ஆச்சரியப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
