விஜய்யுடன் ஒரே கலரில் ட்ரெஸ் முதல் திரிஷாவின் பெர்சனல் வாழ்க்கை வரை.. ஸ்டைலிஷ்ட் சொன்ன சீக்ரெட்
சென்னை: 2026ஆம் ஆண்டின் தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று விஜய்யும், திரிஷாவும் ஒரே கலர் டோனில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்திருந்தது. ஏனென்றால் அந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும்; அவருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும் மனைவி சங்கீதா ஒரு குண்டை தூக்கி போட்டிருந்தார். இந்நிலையில் திரிஷாவின் ஸ்டைலிஷ்ட் கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யும், சங்கீதாவும் பல வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் எழ தொடங்கின. எப்படியும் சரியாகிவிடும் என்று குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் சரி செய்ய முடியாத நிலைமைக்கு சம்பவங்கள் எல்லாம் சென்றுவிட்டன. இதனால் விஜய்யிடமிருந்து விலகுவதற்கு முடிவு செய்த சங்கீதா; விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி அந்த மனுவில், 'தனது கணவர் விஜய்க்கும், இன்னொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும்' தெரிவித்திருந்தார்.

பெரிய பரபரப்பு: சங்கீதா அப்படி சொன்னதால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள்; விஜய்யும், திரிஷாவும் ஒரே நிறத்திலான உடைகளை அணிந்துகொண்டு தயாரிப்பாளர் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தார்கள். ஏற்கனவே எல்லோரும் திரிஷா மீதுதான் சந்தேகப்பட்டிருந்தார்கள். அந்த நிலைமையில் இவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக வந்தது; சங்கீதா சொல்லிய அனைத்தும் உண்மைதான்போல என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே ஆழமாக விதைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவில் திரிஷா: அதற்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விழாவிலும் திரிஷா கலந்துகொண்டார். அவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அவரை விஜய்யின் தாய் ஷோபா உள்ளிட்டோர் ஆரத்தழுவி வரவேற்றார்கள். மேலும் விஜய் பதவியேற்பு விழா மேடையில் பேசியதை இவரோ எமோஷனலாகி கண்கள் கலங்கி கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் திரிஷாவுக்கு பல வருடங்களாக ஸ்டைலிஷ்ட்டாக இருக்கும் ஹர்ஷினி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
ஹர்ஷினி பேட்டி: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "திரிஷாவை பற்றி இப்போது மட்டுமா நெகட்டிவ்வாக பேசுகிறார்கள். கடந்த 25 வருடங்களாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் இந்த அளவுக்கு இல்லை. அதன் காரணமாக அந்தப் பேச்சுக்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை. இத்தனையையும் அவர் தாங்குவதற்கு காரணம் அனுபவம் மட்டும்தான் என்று நினைக்கிறேன். அவரை பொறுத்தவரைக்கும் பெர்சனல் வாழ்க்கை வேறு; தொழில் வாழ்க்கை வேறு. அப்படி இருப்பதுதான் சரி என்று நினைப்பார்.
அந்த நாள்: அதேபோல் திரிஷாவின் சேலை கலெக்ஷன்களும் அருமையாக இருக்கும். ஒருநாள் ஃபோன் செய்து ஃப்ரெண்டோட ரிசப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதற்கு தகுந்தபடி ட்ரெஸ் ரெடி செய்யுங்கள் என கூறினார். நாங்களும் ரொம்பவே அலட்டல் இல்லாத மாதிரி ரொம்பவே பாரம்பரியமான ஒரு புடவையை ரெடி செய்துகொடுத்தோம். நம் ஊர் திருமணம் என்றால் அப்படித்தானே போக வேண்டும். அந்த ரிசப்ஷனுக்கு திரிஷா அணிந்து சென்ற நிறத்திலேயே விஜய்யும் அணிந்திருந்தது செம கோ இன்சிடென்ஸ். அதேபோல் பதவியேற்பு விழா ரொம்பவே அஃபிஷியலானது. அதன் காரணமாக எந்த பந்தாவும், ஜிகுஜிகுவும் இல்லாமல் சிம்ப்பிளாக ஒரு புடவை ரெடி செய்துகொடுத்தோம். அதுவும் பெரிய வைரலானது" என்றார்.


Click it and Unblock the Notifications
