'ரஜினிக்கு ஜோடியா நடிக்கணும்...' - த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை!

By Shankar

செயின்ட் லூயிஸ் (மிசௌரி): தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்காதது தனக்கு பெரும் மனக்குறையாக உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் முன்னணி நடிகை த்ரிஷா.

விழாச் சிறப்புரை ஆற்றிய அவரிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேள்வி கேட்க, அவற்றுக்கு த்ரிஷா பதில் சொல்லும் நிகழ்ச்சி வந்தது.

ஃபெட்னா

ஃபெட்னா

த்ரிஷா, இந்த ஃபெட்னா விழாவுக்கு வந்திருப்பது பற்றிச் சொல்லுங்கள்..

எனக்கு உண்மையலேயே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்த விழாவாக இது அமைந்ததுள்ளது. மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

ரஜினியுடன்

ரஜினியுடன்

தமிழில் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோரோடு நடித்துவிட்டீர்கள்.. இவருடன் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்ற குறை உங்களுக்கு இருக்கிறதா?

ஆமாம்.. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இன்னும் நடிக்காதது எனக்கு பெரிய மனக்குறையாக உள்ளது. அவர் ஒரு சாதனையாளர். சர்வதேச அளவில் ஒரு அடையாளம். விரைவில் அவருடன் நடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறும் என நம்புகிறேன்.

நடிகருடன் திருமணம்

நடிகருடன் திருமணம்

ஒரு துறையில் உள்ளவர்கள் அந்தத் துறை சார்ந்தவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

நிச்சயமாக. அது நல்லதுதான். ஒரு டாக்டரின் தொழிலில் உள்ள பிரச்சினைகள் இன்னொரு டாக்டருக்குத்தான் தெரியும். அதுபோலத்தான் நடிப்புத் துறையிலும்.

அப்படியெனில், ஒரு நடிகரைத்தான் நீங்கள் திருமணம் செய்வீர்களா?

அப்படியெனில், ஒரு நடிகரைத்தான் நீங்கள் திருமணம் செய்வீர்களா?

நான் திருமணம் செய்வதாக இருந்தால் ஒரு நடிகரையே திருமணம் செய்து கொள்வேன். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

தமிழ்தான் வசதி

தமிழ்தான் வசதி

பல மொழிகளில் நடித்திருக்கிறீர்கள். தாய் மொழி தமிழில் நடிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. தமிழ் தாய் மொழி என்பதால் அதில் உள்ள சந்தோஷமே தனி. எந்த மொழிப் படத்தில் நடித்தாலும், அந்த பட ஷூட்டிங் சென்னையில் இருந்தால் இரு மடங்கு சந்தோஷம் வரும். அதுவே தமிழ்ப் படமாக இருந்தால், இன்னும் கூடுதல் சந்தோஷம். தமிழில் நடிக்கிறபோது மிக வசதியாக உணர்கிறேன்.

அழகின் ரகசியம்

அழகின் ரகசியம்

இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கிறீர்களே.. இந்த அழகின் ரகசியம் என்ன?

நான் என்னை ரொம்ப நேசிக்கிறேன். நம்மை கச்சிதமாக வைத்துக் கொள்வதே ஒரு சந்தோஷம்தானே...

அம்மாவுக்கு செய்த நன்மை

அம்மாவுக்கு செய்த நன்மை

உங்கள் அம்மாவுக்கு நீங்கள் சமைத்துத் தந்த உணவு என்ன?

நான் எதுவும் சமைத்துத் தராததே, அவங்களுக்கு நான் செய்யும் மிகப் பெரிய நல்ல விஷயம்!!

-இவ்வாறு த்ரிஷா பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X