»   »  வருண் மணியனுக்கு 'நோ' சொல்லிட்டு த்ரிஷா யாருக்கு ஓகே சொல்லியிருக்கார் பாருங்க!

வருண் மணியனுக்கு 'நோ' சொல்லிட்டு த்ரிஷா யாருக்கு ஓகே சொல்லியிருக்கார் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷாவை மணக்க நடிகை சார்மி விருப்பம் தெரிவிக்க நெட்டிசன்களோ நீங்க இரண்டு பேரும் அவர்களா என்று கலாய்க்கிறார்கள்.

நடிக்க வந்ததில் இருந்தது போன்றே இன்றும் இளமையாக உள்ளார் த்ரிஷா. இத்தனை ஆண்டுகளில் வெயிட் போடவே இல்லை. அப்படியே மெயின்டெய்ன் செய்து வருகிறார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷாவுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். த்ரிஷா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

சார்மி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா...சீக்கிரம் திரும்பி வா பார்ட்டி பண்ணலாம்..இந்த ஆண்டாவது என் திருமண பிரபோசலை ஏற்றுக் கொள் என நடிகை சார்மி ட்வீட்டினார்.

த்ரிஷா

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய சார்மியின் ட்வீட்டை பார்த்து த்ரிஷா கூறியிருப்பதாவது, முதல் முறையே நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன். லவ் யா என்றார்.

லவ்

த்ரிஷா லவ் யா என்று ட்வீட்ட அதை பார்த்து சார்மி பதிலுக்கு லவ் யா என்று ட்வீட்ட ட்விட்டரில் ஒரே பாச மழை பொழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கலாய்

சார்மியும், த்ரிஷாவும் போட்ட ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இருவரும் அவர்களா என்று கிண்டல் செய்தனர். மேலும் அவர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறும் கலாய்த்தனர்.

English summary
Trisha has accepted the marriage proposal of fellow actress Charmme Kaur on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil