தெருநாய்கள் மீதும் கருணை காட்டுங்கள் - மேயருக்கு திரிஷா கடிதம்
விலங்குகள் மீது ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் நடிகை திரிஷா. குறிப்பாக நாய்கள் என்றால் அவருக்கு கொள்ளை இஷ்டம்.
பெடா உறுப்பினராகவும் இருக்கும் திரிஷா, சமீப காலமாக நாய்கள் மீது குறிப்பாக தெரு நாய்கள் மீது அக்கறை காட்டி வருகிறார். சமீபத்தில் கூட சில தெருநாய்களை அவர் தத்தெடுத்தார்.
இந்த நிலையில் தெருநாய்களை பிடித்து அடைத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிஷா சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

கைதிகளைப் போல....
சென்னை நாய்களைப் பிடித்து ஏதோ சிறையில் கைதிகளை அடைப்பதைப் போல அடைப்பதால் மட்டும் தெருநாய்த் தொல்லையைத் தீர்க்க முடியாது. எனவே இந்த கொடும் செயலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரச்சினை தீரலையே...
சென்னையில் முன்பு நாய்களைப் பிடித்து அடைத்து வைத்தும், கொன்றும் நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் இது தோல்வியிலேயே முடிந்தது. தெரு நாய்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. ரேபிஸ் பிரச்சினையும் தீரவில்லை.

வேறு பகுதியில் இருந்து...
நாய்களை தெருவிலிருந்து பிடி்துச் சென்று விடுவதால் மட்டும் பிரச்சினை தீராது. மாறாக ஒரு தெருவில் உள்ள நாய்களைப் பிடித்துச் சென்றால் வேறு பகுதியிலிருந்து மற்ற நாய்கள் வந்து சேர்ந்து கொள்ளும்.

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
மேலும் நாய்கள் விரைவாக இனப்பெருக்கம் செய்யும் திறமை படைத்தவை. எனவே நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு ஆபரேஷனைச் செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினை தீரும்.

அடைக்காதீர்கள்
எனவே நாய்களைப் பிடித்து கைதிகளை அடைப்பதைப் போல அடைப்பதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. எனவே இந்த செயலுக்கு முடிவு கட்டி நாய்களைப் பிடித்து அடைப்பதைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.


Click it and Unblock the Notifications











