அடுத்தடுத்து பெரிய படம்.. செம்ம குஷியில் த்ரிஷா.. இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு ஜாக்பாட் தான்!

சென்னை: மோகன் லால் மற்றும் ஜீத்து ஜோசப் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து த்ரிஷா வைரலாக்கி வருகிறார்.

96 படத்திற்கு பிறகு மீண்டும் கம்பேக் ஆகியுள்ளார் த்ரிஷா. தொடர்ந்து தனது கை வசம் பல பெரிய படங்களை வைத்துள்ள த்ரிஷா, அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன் லால் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு 'ராம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஜெஸ்ஸி டு ஜானு

ஜெஸ்ஸி டு ஜானு

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரசிகர்கள் மத்தியில் நடிகை த்ரிஷாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு த்ரிஷா நடித்த பல படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 படம் த்ரிஷாவை ஜானுவாக தமிழ் ரசிகர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியது.

கனவு நிறைவேறியது

கனவு நிறைவேறியது

ஜானுவாக த்ரிஷா நடித்த நேரம், தொடர்ந்து அவருக்கு பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரிசை கட்டி வருகிறது. த்ரிஷாவின் நீண்ட நாள் கனவான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ரஜினிகாந்துடன் நடிக்கும் கனவு நிறைவேறியது. ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் கனவு நிறைவேறாமல் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தலைவி படத்தில் த்ரிஷா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

எல்லாவற்றுக்கும் மணிமகுடமாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு ரொம்ப சந்தோஷம் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

மோகன் லால்

தமிழ், தெலுங்கு என கலக்கி வரும் நடிகை த்ரிஷா மலையாளத்தில் மோகன் லால் நடிக்கும் ராம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். த்ரிஷ்யம், பாபநாசம், தம்பி உள்ளிட்ட படங்களை இயக்கிய இந்தியாவின் பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ராம் படத்தில் நடிக்கவுள்ளது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என த்ரிஷா தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

2020

2018ம் ஆண்டு 96 படத்தில் மீண்டும் கம்பேக் ஆன நடிகை த்ரிஷாவுக்கு 2019ம் ஆண்டு பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 2020ம் ஆண்டு, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி, பரமபதம் என அடுத்தடுத்து பல பெரிய படங்களில் நடிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X