நாய்க்கு குந்தவை டிரஸ்ஸை போட்டுவிட்ட த்ரிஷா.. இவங்க சேட்டை தாங்கலையேப்பா!
சென்னை: நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீப காலமாகவே அவரது பெயர் பரபரப்புச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கான டிரஸ்ஸை எடிட்டிங் மூலம் நாய் ஒன்றுக்கு அணிவித்து பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை த்ரிஷா செல்லப் பிராணிகள் மீது குறிப்பாக நாய்கள் மீது பெரும் அக்கறையும் அன்பும் கொண்டவர். தனது செல்லப்பிராணியை தனது படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார். அந்த அளவுக்கு நாய் மீது அதிக அன்பு செலுத்தக் கூடியவர். கடந்த 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் தனது செல்லப் பிராணி இறந்ததால் இந்த ஆண்டு எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் இல்லை என்று வேதனையுடன் பதிவிட்டார்.
அதன் பின்னர் புதிய நாய் குட்டி வாங்கி வளர்த்து வருகிறார். அதேபோல் த்ரிஷாவின் நண்பர் விஜய்க்கு பிறந்த நாள் வந்த போது கூட, விஜய் தனது புதிய நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தே வாழ்த்தும் தெரிவித்தார். இதுவும் பேசு பொருளாக மாறியது.

பட்டத்து இளவரசி: நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் நடித்த பல படங்களில் வெகு சில கதாபாத்திர வடிவமைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தையும் குறிப்பிடலாம். இந்த படத்தில் த்ரிஷாவின் லுக் அவருக்கான உடை அலங்காரம், சிகை அலங்காரம், நகை அலங்காரம் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் சோழர் காலத்து பட்டத்து இளவரசிகள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் போல என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.
குந்தவை: அப்படி இவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் பொன்னியின் செல்வன் படமும் ஒன்று. அப்படி இருக்கையில் தனது குந்தவை கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்களை அப்படியே, ஒரு நாய்க்கு அணிவித்தது போன்ற ஒரு எடிட்டிங் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை வேறு ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை சேர்ந்தவர்கள் பகிர்ந்துள்ளதை, த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். முதலில் நான் எப்படி இருக்கிறேன் த்ரிஷா என்று அந்த நாய் த்ரிஷாவை நோக்கி கேட்பது போல கேப்ஷன் வைக்கப்பட்டு, த்ரிஷாவை டேக் செய்துள்ளனர். அதற்கு த்ரிஷா ஹார்டின் எமோஜியை பகிர்ந்துள்ளார். அவை தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











