Trisha: ஆஸ்திரேலியாவில் த்ரிஷா வீடியோ பார்த்தீங்களா.. எக்ஸ்குளூசிவாக த்ரிஷா பகிர்ந்த வீடியோவைப் பாருங்க

சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு இந்த வாரம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ஒருபுறம் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், மறுபுறம் தனது நெருங்கிய நண்பரான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியையும் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் செம்ம ஜாலியாக இருந்த தருணங்களை ஒன்றாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

"A few moments from Aussie land" என்ற எளிய கேப்ஷனுடன் த்ரிஷா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அவரது ஆஸ்திரேலிய பயணத்தின் பல்வேறு தருணங்கள் இடம் பெற்றுள்ளன. விமானப் பயணத்தில் காபி அருந்தியபடியே எடுத்த செல்ஃபி, முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு எடுத்த வீடியோ, ஹோட்டல் வழித்தடத்தில் எடுத்த மிரர் செல்ஃபி, ஆஸ்திரேலிய நகரத்தின் அழகை உயரத்தில் இருந்து ரசித்த காட்சிகள், ஷாப்பிங், பயணத்தின் இடைப்பட்ட சிறிய சிறிய தருணங்கள் என பல நினைவுகளை அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.

Trisha Shares Exclusive Australia Travel Video Fans Love Her Memorable Aussie Moments

அதோடு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும் எடுத்த சில காட்சிகளையும் அவர் சேர்த்துள்ளார். குறிப்பாக கருப்பு நிற உடையில் நிகழ்ச்சிக்காக தயாராகும் தருணங்களும், ரசிகர்களை சந்தித்த நிமிடங்களும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. எந்தவித அலங்காரமும் இல்லாமல், பயணத்தின் இயல்பான தருணங்களையே த்ரிஷா ரசிகர்களுடன் பகிர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

த்ரிஷாவின் ஆஸ்திரேலியா பயணம் கடந்த வாரமே சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசிய வீடியோவும் வைரலானது. அந்த நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், "விஜய் சார் எப்படி இருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியபோது, த்ரிஷா சிரித்தபடியே மௌனம் காத்தது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய த்ரிஷா, நேற்று வெளியான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் பார்த்தார். ரசிகர்களுடன் இணைந்து படத்தை ரசித்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

Trisha Shares Exclusive Australia Travel Video Fans Love Her Memorable Aussie Moments

இந்த பரபரப்புகளுக்கு நடுவே, எந்த அவசரமும் இல்லாமல் தனது ஆஸ்திரேலிய பயணத்தின் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா. தற்போது அந்த வீடியோவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பகிர்ந்து வருவதுடன், "ஆஸி டைரி சூப்பர்", "டிராவல் கோல்ஸ்", "எப்போதும் போல சிம்பிள் த்ரிஷா" என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X