மேக்கப் இல்லாமல் வொர்க்கவுட் செய்யும் த்ரிஷா.. டம்பிள்ஸ்க்கு பதில் கையில் என்ன இருக்கு பாருங்க!

சென்னை: நடிகை த்ரிஷா தனது உயிருக்கு உயிராக குழந்தை போல வளர்த்த செல்ல நாய்க்குட்டி உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நிலையில், அவருக்கு புதிதாக இன்னொரு நாய்க்குட்டி பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த நாய்க்குட்டியை வைத்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார்.

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் தோழியாக நடித்த த்ரிஷா லேசா லேசா படத்திலும் தோழியாக நடிக்க சென்று ஹீரோயினாக மாறினார். அவர் ஹீரோயினாக மாறியது மும்பையில் இருந்து வர வேண்டிய ஒரு நடிகை வராமல் போனதுதான் காரணம் என சமீபத்தில் ராதாரவி கூறியிருந்தார்.

Trisha shares funny workout with her dog getting likes in social media

லேசா லேசா படத்திற்கு முன்னதாக த்ரிஷா நடிப்பில் வெளியான படம் மௌனம் பேசியதே. அந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். விஜயுடன் கில்லி, விக்ரமுடன் சாமி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி, 96 ஜானு, பொன்னியின் செல்வன் குந்தவை என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மறக்க முடியாத அளவுக்கு தனது சிறப்பான நடிப்பால் நடித்து அசத்தி இன்னமும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறதா த்ரிஷா.

குட் பேட் அக்லி வருது: இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படத்திலும் அஜித் குமாருக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். ஜனவரி மாதம் வெளியான டொவினோ தாமஸ் நடித்த ஐடென்டிட்டி படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

தக் லைஃப்: மேலும், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலும் லீடு ரோலில் நடித்துள்ளார் த்ரிஷா. கமல்ஹாசன் உடன் ஏற்கனவே மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா படத்திலும் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். வரிசையாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா தனது உடலையும் கச்சிதமாக மெயின்டெயின் செய்துகொள்ள உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.

சூர்யாவுடன் ஃபுல் சர்க்கிள்: மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா சூர்யாவுடன் மீண்டும் இணைந்து ஆறு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், பல வருடங்கள் கழித்து தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திலும் த்ரிஷா தான் அவருக்கு ஜோடி. அதுதொடர்பாக பேசும் போது ஒரு ஃபுல் சர்க்கிள் அடைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

நாயுடன் வொர்க்கவுட்: நடிகை த்ரிஷா மேக்கப் ஏதும் போடாமல் வீட்டில் ஜிம் டிரெஸ் அணிந்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து ஸ்குவாட் செய்யும் வொர்க்கவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது கையில் டம்பிள்ஸ்க்கு பதிலாக செல்ல நாய்க்குட்டி இருப்பதை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என்றும் பாவம் அந்த நாய் பயப்படப்போகுது என்றும் இதை வைத்து உடற்பயிற்சி செய்தா இப்படி ஒல்லி ஆகிட்டீங்க என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X