Trisha: என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் மோடில் த்ரிஷா.. மும்பையில் என்ன செய்றாங்க பாருங்க!

மும்பை: நடிகை த்ரிஷா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். மூத்த நடிகையும் கூட. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள படமான கருப்பு படம் தான். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் த்ரிஷா. இப்படி இருக்கையில் த்ரிஷா கடந்த வாரத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சுரேஷ் கல்பாத்தி இல்லத்திருமணத்தில் கலந்து கொண்டார். இது பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில், அது தொடர்பாக பலரும் பலவிதமாக ரியாக்ட் செய்தனர். ஆனால் அதில் பார்த்திபனின் பேச்சுக்கு மட்டும் பதிலடி கொடுத்தார் த்ரிஷா.

இந்த சம்பவத்தில் இருந்து த்ரிஷாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்ஸ்டாகிராமில் ஏதாவது பதிவிட்டாலே அதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்களும் இணையவாசிகளும். இந்நிலையில் மும்பை செல்வதற்காக நடிகை த்ரிஷா நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, நடிகர் விஜய் உடன் திருமணத்தில் கலந்து கொண்டது தொடர்பாக சர்ச்சையாகி உள்ளதே, அது தொடர்பாக உங்கள் கருத்து என்று கேட்டதற்கு, எதுவும் சொல்லாமல் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.

சமீபத்திய புகைப்படங்கள்: இப்படி இருக்கையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் த்ரிஷா செம்ம அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் சிலர் என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் மோடில் த்ரிஷா இருக்கிறாரே என்றும் போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

Trisha Shares Her Beautiful Photos On Instagram During Vijay Controversy


அரசியல் என்ட்ரியா?: இது மட்டும் இல்லாமல் நடிகை த்ரிஷா விரைவில் நடிகார் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்படவுள்ளார் என்ற பேச்சுக்களும் அரசியல் வட்டாரத்தில் ஓடிக் கொண்டு உள்ளது. அதுவும் குறிப்பாக நடிகை த்ரிஷா மிக விரைவாகவே தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தான் எந்த கட்சிச் சார்பும் இல்லாதவர் என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X