Mounam Pesiyadhe: வாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் வசனத்தை பேசி வீடியோ வெளியிட்ட த்ரிஷா..
சென்னை: இந்த ஆண்டு காதலர் தினம் வார கடைசியான சனிக்கிழமை வருகிறது. வார நாட்களில் காதலர் தினம் வந்தாலே, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். அதுவே வார இறுதி நாளில் காதலர் தினம் வந்தால் சொல்லவே வேண்டாம், கொண்டாட்டம் என்பது யாருமே கணிக்க முடியாத அளவுக்கு கொண்டாட்டம் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு கோலிவுட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு புது படங்கள் மட்டும் இல்லாமல், ரீ ரிலீஸ்களும் செய்யப்படுகிறது. குறிப்பாக டி. ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா படம் ரீ ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான மௌனம் பேசியதே படமும் ரீ ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக ஏற்கனவே புரோமோஷன்கள் நடைபெற்றாலும், சில தினங்களுக்கு முன்னர் படம் ரீ ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் படத்தில் பணியாற்றியவர்கள் குறித்தும் படம் குறித்தும் பேசி இருந்தார். மேலும் படத்தை முடிந்த வரை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் படம் பார்க்க சூர்யா எந்த தியேட்டருக்கு வருவார் என்ற கேள்வியோடு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் ரீ ரிலீஸ் தொடர்பாக மகிழ்ச்சியாக பேசி பகிர்ந்துள்ள வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, " நான் நடித்த முதல் படமான மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. வரும் 13ஆம் தேதி படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதால் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும். இந்த வாரம் மற்ற வாரங்களை விட ஸ்பெஷலான வாரமாக உள்ளது. காதலர் தின வாரம்.
எல்லாம் இங்கிருந்து தான்: இது மிகவும் முக்கியமான சிறப்பம்சம் வாய்ந்த படம் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. காரணம் இது நான் நடித்து வெளியான முதல் படம். இங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது. தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு நன்றி. அமீர் சார் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, எனது சினிமா கெரியரில் முதல் ஆண்டு நான் உங்களுடன் பணியாற்றியதற்காக. என்னை ஒரு புதுமுக நடிகையாக யாருமே படப்பிடிப்புத் தளத்தில் அணுகவில்லை. எனது முதல் ரிலீஸ் சூர்யாவுடன் அமைந்தது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் என்னுடைய அடுத்த ரிலீஸ் சூர்யாவுடன் தான் இருக்கப்போகிறது.
விஜய் டயலாக்: வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல நான் முழுமையாக ஒரு வட்டமாக திரைத்துறையில் வந்துள்ளேன். யுவன் சங்கர் ராஜாவின் இசை, இந்த படமே மிகச்சிறந்த ஆல்பம் ஹிட் பாடல்களைக் கொண்டுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. லைலாவை சந்திக்கவும் அவருடன் நடிக்கவும் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. அனைவரும் படம் பார்க்க போகவும். படம் பார்த்துவிட்டு எனக்கு மெசேஜ் அனுப்புங்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே மௌனம் பேசியதே படம் குறித்து சூர்யா வீடியோ வெளியிட்ட நிலையில், த்ரிஷாவும் வீடியோ வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











