பிராணிகள் பாதுகாப்பு இல்லம் துவங்கும் த்ரிஷா!

By Shankar

Trisha
தெரு நாய்கள், ஆதரவற்ற வீட்டு மிருகங்கள் மீது தனிப் பாசம் நடிகை த்ரிஷாவுக்கும்.

சமீபத்தில் பெங்களூரில் ரோட்டில் கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வருகிறார்.

பிராணிகள் நல அமைப்பில் இந்திய தூதுவராகவும் உள்ளார்.

ஆதரவின்றி தெருவில் திரியும் பிராணிகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்து வளர்க்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். இதுபோன்ற பிராணிகளை பாதுகாக்க இல்லம் ஒன்றையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் த்ரிஷா.

இதுபற்றி அவர் கூறுகையில், "நாட்டில் நிறைய பிராணிகள் ஆதரவின்றி கிடக்கின்றன. உயிரிழக்கின்றன. இவற்றையெல்லாம் முடிந்தவரை பாதுகாக்க வேண்டும். உலகில் வாழ ஒவ்வொரு உயிரினத்துக்கும் உரிமை உள்ளது. இன்று பல மிருகங்கள் வாழ முடியாமல் உயிரிழக்கக் காரணம் மனிதன்தான்.

நாம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால்தான், இருக்க இடமில்லாமல் தெருவில் அடிபட்டு சாகின்றன மற்ற உயிரினங்கள். உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்தான். ஆனால் நம் ஒவ்வொருவராலும் முடிந்த அளவு அவற்றுக்கு உதவ முடியுமே. அதனால்தான் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன் நான் முன்வந்து உதவ திட்டமிட்டுள்ளேன். நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்றை விரைவில் துவங்க முடிவு செய்துள்ளேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X