விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு.. திரிஷாவும் நாளை வந்துடுவாரோ?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நாளை அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்கு விஜய்யின் ரசிகர்கள் தயாராகியிருக்கிறார்கள். அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருக்கும் சூழலில் திரிஷாவின் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக படம் மெகா ஹிட்டடித்துவிட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் விமர்சன ரீதியாக தொடர்ச்சியாக விஜய் நடித்த படங்கள் அடி வாங்கிவருவதால் ரசிகர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.

vijay trisha tamizhaga vetri kazhagam

கடைசி படம்: சூழல் இப்படி இருக்க விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் அந்தப் படத்தை கேவிஎன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில்தான் நடந்தது. கடைசி படத்தை தரமாக கொடுத்துவிட வேண்டுமென்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்: முன்னதாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அந்த ஆரூடத்தை பலிக்கவைக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியின் பாடலும், கொடியும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பாடலாசிரியர் விவேக் தவெக கட்சியின் பாடலை எழுத; தமன் இசையமைத்திருந்தார்.

முதல் மாநாடு: தவெகவுக்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. எனவே 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அரசியல் கட்சியாக போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. அதனையொட்டி வேலைகளை கட்சியினர் இப்போதே தொடங்கியிருக்கிறார்கள். மேலும் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நாளை நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்திருக்கின்றன. விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்பதற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

திரிஷாவின் ஆதரவு: இந்நிலையில் நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தவெக கொடி மாதிரியே இருக்கும் ஸ்பெயின் கொடியின் புகைப்படத்தை பகிர்ந்து கையில் முறுக்குடன்; தேன்குழல் இன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ விஜய்யின் அரசியலுக்கு திரிஷா முழு ஆதரவு கொடுப்பார் என்று உறுதியாகிவிட்டது. அதனை நேரடியாகவே சொல்ல வேண்டியதுதானே என்று ட்ரோல் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி மாநாட்டுக்கும் திரிஷா வந்துவிடுவார் போல என்றும் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X