நல்லவேளை சூப்பர்னு சொல்றான்.. விடாமுயற்சி பார்த்துட்டு.. வெளியே வந்த த்ரிஷாவின் மைண்ட் வாய்ஸ்!
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பல தடைகளை கடந்து பிப்ரவரி 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்கள் தியேட்டரில் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். காமன் ஆடியன்ஸுக்கு பெரிதாக படம் கனெக்ட் ஆகவில்லை. அதன் காரணமாக கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடர்ந்து இப்படி சொதப்பி வரக் காரணம் என்ன என்கிற கோணத்திலும் விமர்சகர்கள் படத்தை அணுகி வருகின்றனர். அட்லீஸ்ட் அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கடைசி வரை தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை கத்திக் கொண்டு வெளியே வரும் அளவுக்கு கூட படம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயமாக மாறியுள்ளது.

அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் கிளைமேக்ஸில் சேர்ந்தவுடன் தான் ரசிகர்கள் சற்றே ஆறுதல் அடைகின்றனர். இந்நிலையில், நேற்று தியேட்டரில் ரசிகர்களுடன் நடிகை த்ரிஷா படம் பார்த்து முடித்த நிலையில், ரசிகர் சொன்ன கமெண்ட்டுக்கு அவரது ரியாக்ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.
தியேட்டரில் த்ரிஷா: முன்னணி நடிகர்களால் தியேட்டரில் இப்படி நிம்மதியாக படம் பார்க்க முடியாது. பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடும். ஆனால், ஹீரோயின்கள் எல்லாம் தாராளமாக ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்து வருகின்றனர். நடிகை த்ரிஷா நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் விடாமுயற்சி படக்குழுவுடன் படம் பார்த்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கின.
பாராட்டிய ரசிகர்: விடாமுயற்சி படம் முடிந்து த்ரிஷா வெளியே கிளம்பும் போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் த்ரிஷா மேடம் சூப்பரா நடிச்சிருக்கீங்க மேடம்னு கத்தி சொல்ல அதை கேட்ட த்ரிஷா மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமாக வீடியோ ரெக்கார்டு ஆவது தெரியாமல் பேசிய வார்த்தைகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
த்ரிஷா என்ன சொன்னாங்க?: த்ரிஷா மேடம் ஆக்டிங் சூப்பர் என ரசிகர் ஒருவர் பாராட்டிய நிலையில், "நல்லவேளை சூப்பர்னு சொல்றான்" என த்ரிஷா பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விடாமுயற்சி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வருவதால் த்ரிஷா அப்படி சொன்னாரா? அல்லது அந்த படத்தில் அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லாத நிலையிலும் ஆக்டிங் சூப்பர் என சொன்ன நிலையில், அப்படி சொன்னாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குட் பேட் அக்லி கைகொடுக்குமா?: இந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான ஐடென்டிட்டி படத்திலும் அவருக்கு சிறப்பான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. அண்டர்பிளே செய்யும் கேரக்டர் தான். விடாமுயற்சி படத்திலும் 2ம் பாதி முழுக்கவே அவர் காணாமல் போய் விடுகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் தான் த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு கைகொடுக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே போல கமல்ஹாசன், சிம்புவுடன் அவர் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் படத்திலும் அவருக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











