பகையா இருந்து உறவானது எல்லாம் சரிதான்.. ஆனால் அந்த விஷயத்தில் நயன்தாராவை விட த்ரிஷா தான் டாப்
சென்னை: நடிகைகள் த்ரிஷாவும் நயன்தாராவும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து இருந்தார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த பல ஆண்டுகளாக பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையிலான பிரச்னைகள் அனைத்தும் சரி ஆகி, இருவரும் பரஸ்பரம் அன்பு செலுத்த தொடங்கி உள்ளனர்.
இப்படி இருக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்னை என்பது, ஒரு சாரர் தொழில் ரீதியான பிரச்னை என்றும், ஒரு சாரார் இருவருக்கும் இடையில் உள்ள நண்பர்களால் ஏற்பட்ட பிரச்னை என்றும் தகவல்கள் பரவி வந்தது. ஒரு பேட்டியில் த்ரிஷா கூறுகையில், எங்கள் இருவருக்கும் இடையில் சிறிய பிரச்னை உள்ளது. ஆனால் அது தொழில் ரீதியான பிரச்னை இல்லை என்று தெரிவித்தார்.
அதேபோல் நயன் ஒரு பேட்டியில், நாங்கள் இருவரும் இன்னும் சரியாக அறிமுகம் கூட ஆகவில்லை. அந்த அளவுக்குத்தான் எங்களுக்கு இடையிலான உறவு என்று தெரிவித்திருந்தார். திரைத்துறையில் இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இவர்களுக்கு இடையில் எந்த அறிமுகமும் இல்லை என்று சொல்லிக் கொள்வதை பலரும் நம்பவில்லை.

தொழில் போட்டி: இப்படி இருக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையிலான தொழிற்போட்டி என்பது தொடர்ந்து இருந்து வருகிறது, அது நிலவவும் வேண்டும். ஆனால் அது எக்காரணம் கொண்டும் தொழில் பகையாக மாறக் கூடாது. இந்நிலையில் இவர்கள் இருவரில் நடிகை த்ரிஷா ஒரு விஷயத்தில் சிறந்தவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரங்கள் அதிகரித்து வருகிறது. நடிகர்களின் படங்கள் வெளியாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது எனும் போது, அந்த காலகட்டத்தில் அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த, நடிகர்களின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்வது வழக்கமாக மாறி விட்டது.

ரீ ரிலீஸில் முன்னணி: அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்றால் அது விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கில்லி படம் தான். கில்லி படத்தின் ரீ ரிலீஸ்க்கு நடிகை திரிஷா மீண்டும் தியேட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதேபோல் தற்போது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூலை அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் வசூல் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரீ ரிலீஸ் படங்களிலும் கொடி நாட்டும் நடிகையாக த்ரிஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











