twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷாவுக்குப் போன விளம்பர வாய்ப்பு... அசின் திகைப்பு!

    By Shankar
    |

    அப்படியே ஷாக்காகிக் கிடக்கிறாராம் நடிகை அசின்... பின்னே, லட்ச லட்சமாகக் கொட்டும் அழகு சாதனப் பொருள் விளம்பர வாய்ப்பு தன் கை நழுவி த்ரிஷாவுக்குப் போனால் ஷாக்காகாதா என்ன!

    திரிஷா வாய்ப்புகளை அசினும் அசின் வாய்ப்புகளை திரிஷாவும் தட்டிப் பறிப்பது புதிதல்ல. தமிழில் ஆரம்பித்து இப்போது இந்தியிலும் இந்த போட்டி தொடர்கிறது.

    இப்போது விளம்பர படங்களில் நடிப்பதிலும் அந்த போட்டி பலமாகியுள்ளது. பிரபலமான அழகு சாதனப்பொருள் விளம்பரமொன்றில் நீண்ட நாட்களாக அசின் நடித்து வந்தார். இதற்காக அவர் பெரும் தொகையை சம்பளமாக வாங்கினார்.

    தற்போது அந்த வாய்ப்பை திரிஷா தட்டி பறித்துள்ளார். கடந்த வாரம் இதற்கான படப்பிடிப்பு நடந்தது. இப்போது அந்த அழகுசாதனப் பொருளுக்குப் பக்கத்தில் த்ரிஷா சிரிப்பது போல விளம்பரங்களும் வெளியாகிவிட்டன.

    அசினுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

    கடந்த இலங்கை போய் வந்தபிறகு, தொடர்ந்து பல வாய்ப்புகளை இழந்து வருகிறார் அசின். அதில் முக்கியமானது ரஜினிக்கு ஜோடியாக ராணாவில் நடிக்க வந்த வாய்ப்பு. கே எஸ் ரவிக்குமார் அசினை ஒப்பந்தம் செய்ய பரிந்துரைத்தும், ரஜினி வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

    இப்போது முக்கிய விளம்பர வாய்ப்பும் பறிபோயுள்ளது. ஆனால் இதற்குக் காரணம் அசினின் இலங்கைப் பயணமா அல்லது வேறா என்று தெரியவில்லை.

    English summary
    Trisha has won on a major battle against her long standing 'professional foe' Asin. She has replaced Asin in a fairness cream ad recently. The cream is one of the most successful fairness creams in the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X