திரிஷாவின் 'டார்கெட்'!

By Staff


கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் திலீப்புடன் நடிக்க மறுத்தார் திரிஷா. ஆனால் இப்போது அவரது ஒரு படம் மலையாளத்துக்கு டப் ஆகிப் போகிறது.

மலையாள முன்னணி ஹீரோ திலீப்புடன் சேர்ந்து நடிக்க திரிஷாவை சமீபத்தில் அணுகினர். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஸாரி சொல்லி விட்டார் திரிஷா. இதனால் மலையாளத் திரையுலகினர் அப்செட் ஆகியுள்ளனர். இதை பெரிய அவமானமாக அவர்கள் கருதுகிறார்களாம்.

ஆனால், நான் ரொம்ப டைட்டாக இருக்கிறேன். அதனால்தான் நடிக்க முடியாவில்லை. 2008ம் ஆண்டு இறுதிக்குப் பிறகுதான் கால்ஷீட் கொடுக்க முடியும். அதனால்தான் திலீப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறினேன் என்று சின்னதாக ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார் திரிஷா.

திரிஷாவை மலையாள கோலத்தில் தரிசிக்க வந்த வாய்ப்பு இப்படி நழுவிப் போனதால் ஏமாற்றத்தில் இருந்த மலையாள ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் திரிஷாவின் ஒரு படம் மலையாளத்துக்கு டப் ஆகிப் போகிறது.

தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் திரிஷா இணைந்து நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் அத்தடு. திருவிக்ரம் இயக்கியிருந்தார். பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தெருவோர வாழ்க்கை வாழும் இரண்டு முரட்டு நண்பர்களின் கதை இது. இப்படம் தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகின்றனர்.

பாடல்களை எம்.ஜி. ஸ்ரீகுமார், ஜோத்சனா, சுஜாதா, வினீத் சீனிவாசன், பிரான்கோ, கார்த்திக், சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.

படத்துக்குப் பெயர் என்னன்னு சொல்லலியே!, 'டார்கெட்' என்று பெயர் வைத்துள்ளனராம் (அங்கெல்லாம் மலையாளத்தில்தான் டைட்டில் வைக்க வேண்டும் என்று சட்டம் வரலியா?). அக்டோபர் முதல் வாரம் படம் ரிலீஸாகிறது.

'டார்கெட்'டும் திரிஷாவின் வெற்றிப் பட வரிசையில் சேரட்டும்!

More from Filmibeat

Read more about: dileep maheshbabu target trisha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X