இதுவரைக்கும் ‘நெகட்டிவ்’ என்கிற வார்த்தைக்கு இப்படி சந்தோஷப்பட்டதே இல்லை.. நடிகை த்ரிஷா ஹாப்பி!
சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாக சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.
புத்தாண்டுக்கு முன்னதாக தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

கொரோனா பாதிப்பு
சளி மற்றும் இருமல் இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. புத்தாண்டுக்கு முன்னதாக தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது குணமாகி வருகிறேன் என நடிகை த்ரிஷா கடந்த ஜனவரி 7ம் தேதி ட்வீட் போட்டிருந்தார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பிரபலங்களும் த்ரிஷா விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

கொரோனாவிலிருந்து மீண்ட த்ரிஷா
இந்நிலையில், தற்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக நடிகை த்ரிஷா லண்டனில் இருந்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பாக இருங்க த்ரிஷா என ரசிகர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனாவில் இருந்து த்ரிஷா குணமடைந்த நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சந்தோஷ நெகட்டிவ்
நடிகை த்ரிஷா தனது பதிவில் இதுவரைக்கும் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் நெகட்டிவ் என வந்த ரிப்போர்ட்டுக்கு இப்படி சந்தோஷம் அடைந்தது இல்லை என கொரோனா நெகட்டிவ் என வந்ததும் அடைந்த சந்தோஷ தருணம் குறித்தும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

பொன்னியின் செல்வனுக்கு வெயிட்டிங்
பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாம் கொரோனா 3வது அலை காரணமாக சம்மருக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ள நிலையில், திட்டமிட்டபடி சம்மர் ரிலீஸ் படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாகுமா? அல்லது தள்ளிப் போகுமா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. த்ரிஷா நடிப்பில் உருவான ராங்கி மற்றும் மோகன்லால் உடன் ஆரம்பிக்கப்பட்ட ராம் உள்ளிட்ட படங்களின் நிலை என்ன ஆனது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











