Trisha: சுகர் பேபி த்ரிஷா.. ரிகர்சல்லயே இப்படியா.. ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு கிடைத்த லட்டு வீடியோ!

சென்னை: நடிகை த்ரிஷா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். முத்த நடிகை என்றாலும் அவர் இப்போதும் மார்க்கெட்டில் டாப்பில் உள்ளார். இந்த ஆண்டில் இதுவரை மட்டும் இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 5ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அவரது நடனத்தில் உருவாகியுள்ள சுகர் பேபி பாடலுக்கு த்ரிஷா ரிகர்சல் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Trisha Thug Life Sugar baby Song Rehearsal video Goes Trending

சுகர் பேபி: ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அதற்கு முன்னரே படத்தில் இருந்து சில பாடல்கள் வெளியிடப்பட்டது. அதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல் என்றால் அது, த்ரிஷா நடனத்தில் உருவாகியுள்ள சுகர் பேபி பாடல்தான். இந்த பாடலில் த்ரிஷா செம கிளாமராக நடனமாடியுள்ளார். அவரது கிளாமர் என்பது ஆடையில் இல்லாமல், நடன அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் அசத்தியுள்ளார்.

எக்ஸ்பிரஷன்ஸ்: இந்த பாடல் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த பாடலுக்கு த்ரிஷாவின் ரிகர்சல் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும், த்ரிஷா ரிகர்சலிலும் அட்டகாசமான எக்ஸ்பிரஷன்களைக் கொடுக்கிறாரே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகரக்ளும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

த்ரிஷாவின் பெருமை: இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷா பேசும்போது, “ நான் மிகவும் கொடுத்து வைத்தவள். நான் மணிரத்னம் இயக்கத்தில் 4 படங்களிலும் ( ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2, தக் லைஃப்) ஏ.ஆர். ரகுமான் இசையில் 6 படங்களிலும் ( ஆயுத எழுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2, எனக்கு 20 உனக்கு 18 மற்றும் தக் லைஃப்) நடித்துள்ளேன். அதேபோல் கமல்ஹாசனுடன் மூன்று படங்களில் ( மன்மதன் அம்பு, தூங்கா வனம், தக் லைஃப்) நடித்துள்ளதாகவும் பெருமையாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X