செம ஹேப்பியாக ஓட்டுப்போட்ட த்ரிஷா.. வைரலாகும் வீடியோ.. பிரதீப் ரங்கநாதன் முதல் ஜூலி வரை!

சென்னை: தமிழ் சினிமா நடிகைகளில் காலையிலேயெ தனது ஜனநாயக கடமையை நடிகை த்ரிஷா ஆற்றியுள்ளார். சுடிதார் அணிந்து செம சிம்பிளாக சிரித்துக் கொண்டே அவர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியே வரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் குமார் ஆரம்பித்து வைத்த நிலையில், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய், விஜய்சேதுபதி, சியான் விக்ரம், சூர்யா, சிவகுமார், எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பார்த்திபன், ஜெய், ஆரவ், கென் கருணாஸ் என பல பிரபங்கள் தங்கள் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர்.

Trisha to Bigg Boss Julie Cast their votes Actress Trisha video goes viral

கையில் மை வைத்த விரலுடன் அவர்கள் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் ஓட்டுப்போட தூண்டி வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் முதல் வரலட்சுமி சரத்குமார் வரை: அஜித் குமார், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல பிரபலங்கள் காலை முதலே தங்கள் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் ஓட்டுக்களை போட்டு போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஓட்டுப்போட்ட பிக் பாஸ் ஜூலி: விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோ மூலம் பல பிரச்சாரங்களை செய்து வந்த பிக் பாஸ் ஜூலி திடீரென பீச்சில் தனியாளாக சென்று விஜய்க்கு எதிராக போராட்டம் பண்ணப் போகிறேன் என சென்ற நிலையில், காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பிக் பாஸ் ஜூலி இன்று தனது ஓட்டைப் போட்டுள்ளார். கண்டிப்பாக விஜய்க்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாகத்தான் ஜூலி வாக்களித்திருப்பார் என்கின்றனர்.

சந்தோஷத்தில் த்ரிஷா: நடிகை த்ரிஷாவும் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தியுள்ளார். வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சிரித்துக் கொண்டு செம ஹேப்பியாக த்ரிஷா வெளியேறிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சுடிதார் அணிந்து எளிமையாக த்ரிஷா ஓட்டுப் போட்டுச் சென்ற நிலையில், அங்கிருந்த ரசிகர்கள் TVK , TVK என கோஷம் போட்டனர். தனது ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு த்ரிஷா கிளம்பிச் சென்றார். பல சினிமா நடிகர்களும் நடிகைகளும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X