சென்னையில் பிறந்த நாள் கொண்டாடிய த்ரிஷா!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகிகளின் ஆயுள் ரொம்ப குறைவு. அந்த மீறி நீண்ட காலம் நாயகிகளாக தாக்குப் பிடித்தவர்கள் ரொம்பக் குறைவு.
சமீப காலத்திய நாயகிகளில் த்ரிஷா, நயன்தாரா, சினேகா என ஒரு சிலர்தான் பல ஆண்டுகள் ஹீரோயினாகவே இருந்து வருகிறார்கள்.

பத்தாண்டுகளைக் கடந்தும்...
இன்றைய ஹீரோயின்களில் முதலிடத்தில் உள்ளவர் த்ரிஷா. கிட்டத்தட்ட பத்தாண்டுகளைத் தாண்டி அவர் திரையில் நாயகியாகவே பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகளே பலம்...
த்ரிஷாவைச் சுற்றி எப்போதும் ஓயாத சர்ச்சைகள் உண்டு. நடுரோட்டில் பார்ட்டி, காதல், குளியலறை வீடியோ என ஏகப்பட்ட பரபரப்புகள் கிளம்பினாலும், அவரது மவுசு குறையவில்லை. ஒரு வகையில் இந்த சர்ச்சைகளே அவருக்கு பலமாக அமைந்துவிட்டன.

விலங்குகள் மீது காதல்
தமிழ் நடிகைகளிலேயே விலங்குகள் மீது அலாதி அன்பு கொண்டவர் த்ரிஷாதான். கண்ணில் படும் அத்தனை தெரு நாய்களையும் தத்தெடுத்து வளர்க்கிறார். அதேபோல, விலங்கு வதைக்கு எதிரான பெடா அமைப்பின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

பிறந்த நாள்
இன்று முப்பது வயதைத் தொடும் த்ரிஷா, தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறார்.


Click it and Unblock the Notifications











