Trisha - CM Vijay: பதவியேற்ற விஜய்.. த்ரிஷா எமோஷனல் ஆனதைப் பாருங்க பாஸ்.. அம்புட்டு பிரியம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட விஜய் தான் டிரெண்டிங், டாக் ஆஃப் த சிட்டி என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், நடிகை த்ரிஷாவும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதாவது நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்ரிஷா, முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், விஜய் பேசியதைக் கேட்டு மிகவும் எமோஷனல் ஆனார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை த்ரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் என இருவரும் நெருங்கிய நண்பர்கள். தேர்தல் முடிவுகள் தினத்தில் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்த போதே, வெற்றியைக் கொண்டாடவும் வாழ்த்தவும், த்ரிஷா உடனே முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குச் சென்றார்.

Trisha Turns Emotional During CM Vijay s Speech Viral Video Grabs Attention

இப்படி இருக்கையில், முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியிலும் த்ரிஷா கலந்து கொண்டார். த்ரிஷா எப்போதுமே முதலமைச்சர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். தேர்தல் பரபரப்பு தொடங்குவதற்கு முன்னர், இருவரும் இணைந்து திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது பெரும் பரபரப்பை உருவாக்கியது.

எமோஷ்னல் ஆன த்ரிஷா: இப்படி இருக்கையில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதும், விஜய் தனது முதல் உரையை மக்கள் மத்தியில் ஆற்றினார். அதைப் பார்த்த த்ரிஷா மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதைப் பார்த்த பலரும் த்ரிஷாவுக்கும் விஜய்யை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் கனவாக இருந்திருக்கும் என்றும், அரசியல் களத்தில் விஜய் சறுக்கல்களை சந்தித்தபோதும் ஊக்கம் கொடுத்தவர்களில் த்ரிஷாவும் முதன்மையானவராக அல்லவா இருந்திருப்பார் என்றும் பேசி வருகிறார்கள்.

Trisha Turns Emotional During CM Vijay s Speech Viral Video Grabs Attention

அரசியலில் த்ரிஷாவா?: இது மட்டும் இல்லாமல், விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை அவர் ராஜினாமா செய்தாக வேண்டும், அப்படி இருக்கையில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியில் த்ரிஷா தான் போட்டியிடவுள்ளார் என்று எல்லாம் பேச்சுக்கள் அரசியல் தளத்தில் அடிபடுகிறது. ஒரு சிலர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X