கோலிவுட் நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும் த்ரிஷா.. விஜய் முதல் சூர்யா வரை.. ஆல் டைம் ஹை!

சென்னை: தென்னிந்திய ராணி 'சவுத் குயின்' என கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா தொடர்ந்து கோலிவுட் ஹீரோக்களுக்கு டாப் பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் அவரை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

ரஜினிகாந்த் உடன் த்ரிஷா நடித்த பேட்ட படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. விஜய்யுடன் மீண்டும் இணைந்த லியோ படம் தான் விஜய் கரியரில் இதுவரை அவர் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியது.

Trisha ultimately turns Kollywood lucky charm for Vijay to Suriya to deliver their highest box office

அஜித்துக்கு குட் பேட் அக்லி படத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்த தேவதை த்ரிஷா இப்போ சூர்யாவுக்கு 'கருப்பு' படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

23 வருஷமா லீடு: ஜோடி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் சின்ன சீனில் சிம்ரன் உடன் நடித்த த்ரிஷா சூர்யாவுடன் மெளனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். விக்ரம் உடன் சாமி, பீமா, விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என பல படங்களில் நடித்து பிரபலமானார். அஜித்துடன் க்ரீடம், மங்காத்தா, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கலக்கி வருகிறார். இந்த வாரம் வெளியான சூர்யா படத்திலும் நடித்து மெளனம் பேசியதே முதல் கருப்பு வரை என சூர்யாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத வெற்றியை கொடுத்துள்ளார்.

தளபதி விஜய்க்கு அதிக வசூல்: த்ரிஷாவுடன் விஜய் இணைந்த கில்லி திரைப்படம் தான் விஜய்க்கு முதன் முதலாக 50 கோடி வசூலை அள்ளித் தந்த படமாக மாறியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வசூலை ஈட்டி விஜய்க்கு அதிக வசூலை ஈட்டிய படத்தை கொடுத்தது. லியோ சாதனையை ஜன நாயகன் முறியடிக்குமா? என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Trisha ultimately turns Kollywood lucky charm for Vijay to Suriya to deliver their highest box office

கார்த்திக்கு பொன்னியின் செல்வன்: சியான் விக்ரம், ரவி மோகன், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கார்த்தி ஜோடியாக குந்தவை த்ரிஷா நடித்திருப்பார். கார்த்தி நடித்து இதுவரை அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் பாகங்களே உள்ளன.

Trisha ultimately turns Kollywood lucky charm for Vijay to Suriya to deliver their highest box office

மங்காத்தா முதல் குட் பேட் அக்லி வரை: விடாமுயற்சி படத்திலேயே அஜித்துடன் த்ரிஷா நடித்திருந்தாலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், அஜித்துக்கு 200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளித் தந்த படமான குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின். மேலும், விஜய்யுடன் கில்லி போல அஜித்துடன் மங்காத்தா படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha ultimately turns Kollywood lucky charm for Vijay to Suriya to deliver their highest box office

சூர்யாவுக்கு கருப்பு: புக் மை ஷோவில் இப்பவே 1 மில்லியன் டிக்கெட்டுகளுக்கு மேல் புக்கிங் கடந்து ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்ட் உடன் படம் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்திலும் த்ரிஷா ப்ரீத்தி எனும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் படத்துக்கு தேவையான வேலையை கச்சிதமாக பார்த்துள்ளார். சூர்யாவுக்கு முதல் 200 கோடி வசூல் படமாக கருப்பு அமையும் என்கின்றனர்.

ரஜினி - கமல் படத்தில் நடிப்பாரா?: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிக்கும் படத்திலும் த்ரிஷா தான் ஜோடி என்றும் அவருக்கு 12 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்னொரு பக்கம் விஜய்க்காக த்ரிஷா அந்த படத்தை மறுத்து விட்டார் என்றும் கூறுகின்றனர். ஒருவேளை ரஜினி - கமல் படத்தில் த்ரிஷா நடித்து தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாகவும் அந்த படம் மாறினால் தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட தேவதை த்ரிஷா தான் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X