'விடாதீங்க போலீஸ்.. அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க' - போதை ஓட்டுநர்களுக்கு எதிராக த்ரிஷா
சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சும்மா விடக்கூடாது. கடுமையான தண்டனை தர வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் பல விபத்துக்கள் நடக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டும் என அரசும் போக்குவரத்து காவல் துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போதையால் தினசரி நடக்கும் விபத்துகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

பேட்டி
இந்த நிலையில் போக்குவரத்துப் போலீசாருக்கு உதவும் வகையில் நடிகை த்ரிஷா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், "குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால் நிறைய அப்பாவி மக்கள் பலியாகின்றனர்.

கடும் தண்டனை
இந்த குற்றங்களை செய்பவர்களைச் கடுமையாக தண்டிக்க வேண்டும். குடிபோதையில் வண்டி ஓட்டும் குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருப்பேன்.

வீட்டுக்குப் போய் குடிங்களேன்..
பணியில் இருக்கும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பேசாமல் வீட்டுக்கு போய் குடித்து விட்டு தூங்கலாமே.

என்னோட கார் ட்ரைவராக இருந்தாலும்...
எனது கார் டிரைவர் குடித்து இருப்பதாக நான் அறிந்தால் கூட உடனடியாக அவரை போலீசில் ஒப்படைத்து விடுவேன்.

ஹைதராபாதில்...
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஹைதராபாத் போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். குடிகாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
நிறைய டிரைவர்கள் குறைந்த படிப்பறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைக்கு அதுவும் ஒரு காரணம்," என்றார்.


Click it and Unblock the Notifications











