»   »  திருமணத்துக்கு முன்பே த்ரிஷாவைப் பிரிந்து விட்டாரா வருண் மணியன்? - பரபரப்பு தகவல்கள்

திருமணத்துக்கு முன்பே த்ரிஷாவைப் பிரிந்து விட்டாரா வருண் மணியன்? - பரபரப்பு தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷா - வருண் மணியன் திருமணம் ரத்தாகிவிட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபரும் படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் திருமணம் எப்போது என்பதை அறிவிக்காமல் வைத்திருந்தார்கள்.

விலகல்

விலகல்

இந்த நிலையில் த்ரிஷாவை நாயகியாக வைத்து புதிய படம் எடுக்கப் போவதாக அறிவித்தார் வருண் மணியன். ஆனால் அந்தப் படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக திடீரென அறிவித்தார் த்ரிஷா. அவருக்கு பதில் வேறு நடிகையையும் அறிவித்துவிட்டார் வருண் மணியன். எதற்காக விலகினார் என்பது மட்டும் கடைசி வரை தெரியாமலே இருந்தது.

மோதல்

மோதல்

இந்த நிலையில்தான் த்ரிஷா- வருண் மணியன் கடும் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மோதல்தான் வருண் மணியன் தயாரிக்கும் படத்திலிருந்து த்ரிஷா விலகக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், முன்பெல்லாம் விருந்து நிகழ்ச்சிகளில் வருண் மணியனுடன் ஜோடியாக கலந்துகொள்ளும் த்ரிஷா இப்போது தனியாகவே வருகிறாராம்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

வருண் மணியனின் குடும்ப நிகழ்ச்சியொன்று நடந்துள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் த்ரிஷா மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம்.

ரத்து - சமாதானம்

ரத்து - சமாதானம்

இதைத் தொடர்ந்து இருவரின் நிச்சயதார்த்தமும் ரத்தாகிவிட்டதாக சிலர் புரளி கிளப்பி வருகின்றனர். இருவரையும் சமாதானப்படுத்த நண்பர்கள் முயற்சித்து வருவதாகக் கூறுகிறார்கள்.

English summary
Kollywood sources say that actress Trisha and Varun Maniyan marriage proposal was dropped due to difference of opinion between them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil