த்ரிஷா கொடுத்த சர்ப்ரைஸ் தியேட்டர் விசிட்.. உச்சகட்ட சந்தோஷத்தில் ‘கருப்பு’ சூர்யா ரசிகர்கள்!
சென்னை: நடிகை த்ரிஷா இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான கருப்பு படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சென்று பார்த்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கருப்பு படத்தின் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சிக்கும் நடிகை த்ரிஷாவை படக்குழு அழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனாலும், மே 14ம் தேதி படம் வெளியாக முடியாமல் பல பிரச்னைகளை சந்தித்த நிலையில், இன்று முதல் ஆளாக படத்தை பார்த்து சப்போர்ட் செய்துள்ள த்ரிஷாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தியேட்டரில் த்ரிஷா: நடிகை த்ரிஷா சென்னை ரோஹினி தியேட்டரில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட கருப்பு படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று நடிகை த்ரிஷா பார்த்துள்ள வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் வெளியான கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷாவை அழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு த்ரிஷா பங்கேற்றுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி முதல் சாய் அபயங்கர் வரை: நடிகை த்ரிஷாவுடன் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் கருப்பு படத்தின் FDFS காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடி ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோக்களை எடுத்துள்ளனர்.
கண்ணீர் விட்ட ஆர்ஜே பாலாஜி: நேற்று இதே நேரம் கருப்பு படம் வெளியாகா முடியாமல் போன நிலையில், ஆர்ஜே பாலாஜி இதுதான் கடைசியாக காரில் சீட் பெல்ட் மாட்டிக் கொண்டு போடும் வீடியோவாக இருக்கும் என பேசும் போது கருப்பு படத்தை வெளியிட சூர்யா எவ்வளவோ காசு கொடுத்து உதவி செய்துள்ளார் என பேசும் போதே கண்கலங்கி விட்டார். நேற்று மதியம் வெளியாகும், மாலை வெளியாகும், இரவு வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கிடந்த நிலையில், அனைத்து கடன் பிரச்னைகளையும் சமாளித்து கருப்பு படத்தை இன்று காலை வெளியிட்டுள்ளனர்.
த்ரிஷாவை பாராட்டிய சூர்யா: கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் த்ரிஷா பங்கேற்காத நிலையிலும், சூர்யா பேசும் போது, த்ரிஷாவுடன் மெளனம் பேசியதே படத்தில் நடித்து 23 வருடங்கள் ஆனது போல தெரியவில்லை. ஏதோ போன வாரம் தான் சினிமாவுக்கு வந்து நடித்து விட்டு இந்த வாரம் மீண்டும் நடிப்பதை போல இருந்தது என்றார். மெளனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு கருப்பு படத்தில் மீண்டும் சூர்யா - த்ரிஷா ஜோடி இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications