மருதமலை மாமணியே முருகய்யா.. திடீரென திரிஷா அடித்த கோவில் விசிட்.. சூர்யா 45 படமே பக்தி படமா?

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு திடீரென பல கோயில்களுக்கு விசிட் அடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ள நடிகை த்ரிஷா தற்போது கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

நடிகை த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் படத்தில் நடித்த சூர்யாவுடனே மீண்டும் அவர் ஹீரோயினாக மாறி தற்போது நடித்து வருகிறார். சூர்யா 45 படக்குழுவினர் நேற்று மாலை த்ரிஷாவை வரவேற்று கேக் கட்டிங் எல்லாம் செய்த வீடியோவை ட்ரீம் வாரியர் நிறுவனம் தற்போது வெளியிட்டது.

trisha marudhamalai suriya 45

ஒரு 'ஹோல் சர்க்கிள்' நடந்துடுச்சு என சூர்யாவுடன் மீண்டும் இணைவது குறித்து தனது சந்தோஷத்தை நடிகை த்ரிஷா பகிர்ந்து கொண்டதும் த்ரிஷா வரவேற்று மீண்டும் சிரித்த முகத்துடன் சூர்யா தென்பட்டதை பார்த்ததும் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

மருதமலை கோயிலில் த்ரிஷா: கோவையில் தான் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மாசாணியம்மன் கோயிலில் படத்துக்கான பூஜை போட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் வழிபட்டு படத்தை ஆரம்பித்தனர். கீர்த்தி சுரேஷ் திருமணத்தை முடித்துவிட்டு நடிகை த்ரிஷா தற்போது சூர்யா 45 படத்தில் பங்கேற்ற நிலையில், மருதமலை கோயிலுக்கு த்ரிஷா சென்ற காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

22 ஆண்டுகள் டாப் ஹீரோயினாக: அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற "பார்க்காத என்னை பார்க்காத" உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. விஜய், அஜித் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்போது சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த நிலையில், தற்போது சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து என்ன மாதிரியான படத்தில் நடிக்கப்போகின்றனர் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாமி படமா?: சியான் விக்ரமுடன் சாமி படத்தில் நடித்த த்ரிஷா சூர்யாவுடன் இணைந்து சாமி மற்றும் பக்தியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். மாசாணியம்மன் எனும் படத்தை த்ரிஷாவை வைத்து இயக்கவே ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென சூர்யா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், கருப்பசாமியாக அந்த படத்தை மாற்றப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா ராசி சூர்யாவுக்கு கைகொடுக்குமா?: நடிகர் சூர்யா தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், த்ரிஷாவுடன் இணைந்து அவர் நடிக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X