»   »  கமலுக்கு மொத்தமாக கால்ஷீட்... செல்வராகவன் படத்திலிருந்து த்ரிஷா விலகல்?

கமலுக்கு மொத்தமாக கால்ஷீட்... செல்வராகவன் படத்திலிருந்து த்ரிஷா விலகல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டதால் செல்வராகவன் - சிம்பு படத்தில் நடிக்காமல் த்ரிஷா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்புக் கொண்டு, போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டார். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக டாப்சி நடிக்கிறார்.

2 புதுப்படங்கள்

2 புதுப்படங்கள்

அடுத்த வாரம் செல்வராகவன் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், கமல் ஹாஸனின் புதிய படம் மற்றும் சுந்தர் சியின் அரண்மனை 2 போன்ற படங்களில் நடிக்க த்ரிஷா கால்ஷீட் தந்துள்ளார்.

கமலுக்கு முன்னுரிமை

கமலுக்கு முன்னுரிமை

குறிப்பாக கமல் படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் தந்துள்ளாராம். இதனால் செல்வராகவன் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறி த்ரிஷா விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

வருண் மணியன் காரணமா?

வருண் மணியன் காரணமா?

செல்வராகவன் படத்துக்கு பைனான்ஸ் பண்ணுபவர் த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியன் என்பதால் த்ரிஷா விலகிக் கொண்டதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது.

மறுப்பு

மறுப்பு

ஆனால் த்ரிஷா தரப்பில் விசாரித்தபோது, அதெல்லாம் காரணமில்லை... கால்ஷீட் இல்லாததால்தான் த்ரிஷா நடிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்தனர்.

போட்டோ ஷூட்டில் பங்கேற்ற பிறகு, கால்ஷீட் இல்லை என த்ரிஷா கூறியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
According to reports in Kollywood, Trisha is said to have opted out of Selvaraghavan's new film with Simbu
Please Wait while comments are loading...