நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை- த்ரிஷா
நடிக்க வந்து பத்துப் பதினோரு ஆண்டுகள் கடந்த பிறகும் தினசரி செய்திகளில் வரும் நாயகியாகத் திகழ்கிறார் த்ரிஷா.
முன்பெல்லாம் தினமும் த்ரிஷாவுக்கு கல்யாணம் என்று செய்தி வந்து கொண்டிருந்தது.
இப்போது மீண்டும் அவர் பரபரப்பாக புதுப்படங்களில் ஒப்பந்தமாகும் செய்திகள் வருகின்றன.

தமிழில் நேற்றுதான் அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம் வெளியானது. படம் குறித்து நல்ல விதமான பேச்சுகள் உலா வருவதால், மீண்டும் த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
என்றென்றும் புன்னகை படம் குறித்து த்ரிஷா கூறுகையில், "நான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் 'ஸ்பெஷல்' ஆன ஒன்று. இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கேரக்டரில் நடித்துள்ளேன். வலுவான வேடத்தில் வருகிறேன். என் பாத்திரத்தை இயக்குநர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார். காமெடி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது. அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பும் ஜாலியாக இருந்தது," என்றார்.
திருமணம் குறித்து பேசுகையில், "நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது. ஆனால் எப்போது என்று தெரியவில்லை. நேரம் வரும்போது செய்து கொள்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











