'வில்லி' ஆக ஆசைப்படும் ஹீரோயின் த்ரிஷா
சென்னை: வில்லியாக நடிக்க த்ரிஷா ஆசைப்படுகிறார்.
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால் இன்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் தவிர அவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அவர் கன்னடப் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.

காதலி
த்ரிஷா தான் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார்.

வித்தியாசம்
தனக்கும் அனுஷ்கா போன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று த்ரிஷா எதிர்பார்க்கிறார். ஆனால் வாய்ப்பு தான் வந்த பாடில்லை.

சலிப்பு
ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து நடித்து த்ரிஷாவுக்கு போர் அடித்துவிட்டதாம். அதனால் ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

வில்லி
இத்தனை நாட்களாக ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளார். தான் எதிர்பார்ப்பது போன்று வித்தியாசமான கதாபாத்திரம் விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











