த்ரிஷாவின் 'சூப்பர் ஸ்டார்' ஆசை நிறைவேறுமா?
சென்னை: த்ரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமாம்.
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை கடந்துவிட்டார். இந்த காலகட்டத்தில் அவர் அஜீத், விஜய், விக்ரம், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். மேலும் தெலுங்கு திரை உலகிலும் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஒரு ஆசை மட்டும் நிறைவேறாமல் உள்ளது.

கமல்
மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷா உலக நாயகன் கமல் ஹாஸனுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

ரஜினி
கமலுடன் நடித்த த்ரிஷாவுக்கு ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது.

த்ரிஷா
த்ரிஷாவும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் அதை யாரும் கேட்பார் இல்லை.

மார்க்கெட்
த்ரிஷாவின் மார்க்கெட் தற்போது படுத்துவிட்டது. இதையடுத்து அவர் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடி சேரவும் தயாராக உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

சோனாக்ஷி
ரஜினிகாந்த் தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா என்று பாலிவுட்டை கலக்கும் நாயகிகளுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications